×
 

பெருங்கொடுமைக்கு கிடைத்த நீதி.. பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு..!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை அனைவரும் வரவேற்றுள்ளனர். இந்த நிலையில், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

இந்த தொடர்பாக தனது எக்ஸ்பிரஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும். என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: EPS நடவடிக்கையால் தான் நீதி கிடைத்துள்ளது.. பொள்ளாச்சி வழக்கு குறித்து அதிமுக கருத்து..!

இதையும் படிங்க: ரொம்ப மன உளைச்சலா இருந்துச்சு..! 51 தமிழக மாணவர்கள் ஜலந்தரிலிருந்து மீட்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share