×
 

அவதூறு பேச்சுக்கு ஆப்பு..! மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை... சபாநாயகர் அதிரடி”

Mla மார்க்கண்டே என் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக சபாநாயகர் பிரபாகர் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை சட்டப்பேரவை கூடியது. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் தொடங்கிய இந்த நாளின் அலுவல்களில் முதலில் மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழ் திரைத்துறை, இலக்கியம் மற்றும் இசைத்துறையில் தங்கள் பங்களிப்பால் நினைவுகூரப்படும் சில முக்கிய பிரபலங்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து மேகதாது விவகாரம் குறித்தும் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாகவும் விவாதங்கள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், முதல்வர் மற்றும் அவை குறித்து பேசிய மார்க்கண்டே என் மீது நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் நிர்மல் குமார் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர்கள் வலியுறுத்தினார்.

அவை மாண்பை குறைக்கும் வகையில் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வெளியில் பேசிய மார்கண்டேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. எல்லோரும் கேட்கும் வகையில் தரமாக பேசக்கூடிய மார்க்கண்டேயன் வெளியில் பேசியது மனம் வருத்தம் தந்தது என்று சபாநாயகர் அப்போது தெரிவித்தார். வன்முறை பேச்சுக்காக மார்க்கண்டையின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பலர் தனக்கு கோரிக்கை விடுத்ததாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: MLA மார்க்கண்டேயன் ஜாமினில் விடுவிப்பு..!! முதல்வர் குறித்து பேசியதால் 2 வாரம் சிறைவாசம்..!!

முதல்வர் குறித்து வெளியில் மார்கண்டேயன் பேசிய அவதூறு என்ன என்பதை சபாநாயகர் பிரபாகர் படித்துக் காட்டினார். ஆபாசமான பேச்சையும் ஆபத்தையும் விளைவிக்கும் பேச்சையும் பேசுவதால் நாம் என்ன சாதித்து விட முடியும் என்று கேட்டார். அவை மாண்பை குறைக்கும் வகையில் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வெளியில் பேசிய மார்க்கண்டை என் மீது நடவடிக்கை எடுக்க முடிவெடுத்து இருப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நான் ஹாப்பியா இருக்கேன்... ஜெயில்ல 25 BOOKS இருக்கு... சிறைக்குச் செல்லும் முன் எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேச்சு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share