×
 

நான் ஹாப்பியா இருக்கேன்... ஜெயில்ல 25 BOOKS இருக்கு... சிறைக்குச் செல்லும் முன் எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேச்சு..!

மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லும் முன்பு தொண்டர்களிடம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேசினார்.

திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், முதல்வர் விஜயை விமர்சித்து பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

நேற்று முன்தினம் அதிகாலை, விளாத்திகுளத்தில் உள்ள மார்க்கண்டேயனின் வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர், அவரது வீட்டுக்குச் சென்ற போலீசார் கைது செய்தனர். மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு திமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. 

எம்எல்ஏ மார்க்கண்டேயனை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை அனுமதி கேட்டது. அதே வேளையில் எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஜாமீன் மறுக்கப்பட்டதால் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயின் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார். 

இதையும் படிங்க: MLA மார்க்கண்டேயன் ஜாமின் மனு தள்ளுபடி..! தலையில் இடியை இறக்கிய தூத்துக்குடி கோர்ட்..!!

போலீஸ் வாகனத்தில் ஏறிய பிறகு ஜன்னல் வழியாக தொண்டர்களிடம் மார்க்கண்டேயன் பேசினார். அப்போது சிறையில் ஹாப்பியாக இருப்பதாக நீதிமன்ற வளாகத்தில் தொண்டர்களிடம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கூறியுள்ளார். எந்த அளவுக்கு துன்பப்படுகிறோமோ அவ்வளவு விரைவில் ஆட்சிக்கு வருவோம் என்றும் தெரிவித்துள்ளார். சிறை ரொம்ப சௌகரியமாக இருக்கிறது, 25 புத்தகங்கள் வைத்திருக்கிறேன் என தொண்டர்களிடம் கூறினார். 

இதையும் படிங்க: BAN NEET..! அதான் ஒரே வழி... வெடிக்கும் டெல்லி போராட்டம்... ஸ்டாலின் வலியுறுத்தல்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share