×
 

“இன்று போய் நாளை வா...” - மார்க்கண்டேயனுக்கு மரண ட்விஸ்ட்... ஷாக்கில் திமுக...!

மார்க்கண்டேயன் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை ஜூலை 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு 

தூத்துக்குடி விளாத்திகுளம் தூத்துக்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீதான வழக்கு விசாரணை தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடி மாவட்ட நீதிபதி சுபாதேவி மார்க்கண்டேயன் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை ஜூலை 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு 

தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும்  பேசிய விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது தூத்துக்குடி மாவட்ட குற்ற பிரிவு காவல் துறையினர் மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த இருபதாம் தேதி அவர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த 9 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் 

தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு சார்பில் தன் மீது போடப்பட்ட வழக்கு சட்ட முரண்களுக்கு எதிரானது என தெரிவித்து இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயண் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயில் தண்டனை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு  இந்த மனு மீதான விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது 

இதையும் படிங்க: சிறையில் 30 நிமிட சந்திப்பு! மார்கண்டேயனிடம் உதயநிதி பேசியது என்ன? உளவுத்துறையை ஏவிய முதல்வர் விஜய்!

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி சுபா தேவி முன்னிலையில் வந்தது அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்க்கண்டேயன் தரப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஜாமின் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார் இந்த நிலையில் மார்க்கண்டேயன் தரப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அனந்த பத்மநாபன் மற்றும் ஜான் அலெக்சாண்டர் ஆகியோர் ஜாமின் வழங்க வேண்டும் என கூறி தங்கள்  தரப்பு வாதத்தை எடுத்து வைத்தனர்

இதைத் தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட தூத்துக்குடி மாவட்ட நீதிபதி சுபா தேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தரப்பு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இன்று நடைபெற்ற  ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை ஜூலை 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்

இதையும் படிங்க: குறுக்கு வழி ஆட்சி... பனையூர் பங்களாவில் பதுங்கல்..! உதயநிதி துணிச்சல பார்த்து இருக்கீங்களா CM சார்..? விளாசிய அப்பாவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share