வேலூரில் போராட்டம் அறிவித்த அதிமுக..! முந்தி கொண்ட எம்எல்ஏ..! ஹாஸ்பிடல் திறப்பு தேதி அறிவிப்பு..!
அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில் மருத்துவமனையின் திறப்பு தேதியை எம்எல்ஏ அறிவித்துள்ளார்.
மக்கள் பிரச்சினைகளை வலியுறுத்தியும், சுகாதார சீர்கேடு, அடிப்படை பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி அவ்வப்போது அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவது வழக்கம். அப்படியாக குடியாத்தத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு தலைமை மருத்துவமனையை திறக்கவில்லை எனக் கூறி அதிமுக கண்டனம் தெரிவித்திருந்தது. திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த போவதாகவும் அதிமுக அறிவித்து இருந்தது.
குடியாத்தம் நகரில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு தலைமை மருத்துவமனையை திறந்து வைக்காமல் காலம் தாழ்த்தியும் நகராட்சி வாழ் மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றாமலும் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் வதிமுக ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் குடியாத்தம் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அதிமுக அறிவித்தது.
மக்கள் நலன் கருதி புதிய அரசு தலைமை மருத்துவமனையை உடனடியாகத் திறந்திட வலியுறுத்தியும், மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிட வலியுறுத்தியும், வேலூர் புறநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். வரும் 27ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அதிமுகவினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: திமுகவில் ஐக்கியமான வைத்திலிங்கம்..! ஒரத்தநாடு தொகுதி காலியானதாக அறிவிப்பு..!
அதிமுக வரும் 27ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்த நிலையில் எம்எல்ஏ நந்தகுமார் மருத்துவமனை திறப்பு தேதியை அறிவித்துள்ளார். 27 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் ஒரு நாள் முன்னதாக 26 ஆம் தேதியே மருத்துவமனையின் திறப்பு விழா நடைபெறும் என அறிவித்துள்ளார். காலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆர்ப்பாட்டம் அறிவித்த நிலையில், மாலைக்குள்ளேயே மருத்துவமனை திறப்பு தேதியை எம்எல்ஏ அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஊழலில் மூழ்கிய தமிழகம்..! அடுக்கு மொழி முதல்வர்..! பிரச்சனைகளை லிஸ்ட் போட்ட TTV..!