திமுகவில் ஐக்கியமான வைத்திலிங்கம்..! ஒரத்தநாடு தொகுதி காலியானதாக அறிவிப்பு..!
வைத்திலிங்கம் திமுகவில் இணைந்த நிலையில் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரத்தநாடு தொகுதியை தன் தொகுதியாகக் கொண்ட, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக பல ஆண்டுகள் பணியாற்றியவர் வைத்திலிங்கம். அவரது அரசியல் வாழ்க்கை ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலிருந்து தொடங்கி, கட்சியின் உள்ளக மாற்றங்கள், அதிகாரப் போராட்டங்கள் என பல சவால்களை எதிர்கொண்டு வந்துள்ளது.
வைத்திலிங்கம் 2001ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியிலிருந்து முதல் முறையாக எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் அவர் தொழில்துறை அமைச்சராகவும், பின்னர் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
இது அவரது அரசியல் வாழ்க்கையின் முதல் பெரிய உயர்வாக அமைந்தது. அதன்பிறகு 2006 மற்றும் 2011 தேர்தல்களிலும் ஒரத்தநாடு தொகுதியில் வெற்றி பெற்று தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்தார். அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார் வைத்திலிங்கம்.
இதையும் படிங்க: வைத்திலிங்கம் முடிவு துரதிஷ்டவசமானது..! எனக்கு ஒரே நிலைப்பாடு தான்...! சசிகலா ஆதங்கம்..!
ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் கொடுத்திருந்தார். இந்த நிலையில் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தனது எம்எல்ஏ பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்திருப்பதால் அவர் பதவி வகித்து வந்த ஒரத்தநாடு தொகுதி காலியானதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுகவில் இணைந்தது ஏன்? OPS இதை செய்யவில்லை..! வைத்திலிங்கம் பரபரப்பு பேட்டி..!