×
 

நிருபர் மீதான தாக்குதல்... கொந்தளிக்கும் அரசியல் தலைவர்கள்..! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கண்டனம்..!

கல்குவாரி குறித்து செய்து சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிகழ்வுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கல்குவாரி குறித்து செய்து சேகரிக்கச் சென்ற செய்தியாளர் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில், சிவாயம் பகுதியில் அமைந்துள்ள ஒரு கல் குவாரி தொடர்பான முறைகேடுகளை விசாரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையவராக ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ எம். பழனியாண்டி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சி சேனலின் நிருபர் ஈ. கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் எஸ். செபாஸ்டின் ஆகியோர் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சிவாயம் கிராமத்தில் இயங்கும் கல் குவாரியில் சட்டவிரோதமாகக் கல் வெட்டுதல், சுற்றுச்சூழல் விதிகள் மீறல் போன்றவை குறித்து செய்தி சேகரிக்கச் சென்றனர். அவர்களுடன் சில சமூக ஆர்வலர்களும் இணைந்திருந்தனர். குளித்தலை-மணப்பாறை சாலையில் சுமார் 25 முதல் 50 பேர் கொண்ட கும்பல் செய்தியாளர் குழுவை சுற்றி வளைத்ததாக கூறப்பட்டு உள்ளது. அவர்கள் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி இருந்ததாகவும் வீடியோ கேமரா, லைவ் டிரான்ஸ்மிட்டிங் உபகரணம், டிரோன், மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றைப் பறித்து உடைத்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இது தொடர்பான ஆதாரங்கள் அவ்வப்போது வெளிவந்து வருகின்றன. இதில் எம்எல்ஏ பழனியாண்டி கேமராவை பிடுங்கி செய்தியாளரை தாக்குவது போன்ற காட்சிகள் வெளியாகின. இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் வரம்பு மீறிய செயல் எனவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து வலியுறுத்துவோம் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முக்கிய குற்றவாளியை காப்பாற்றும் கரூர் போலீஸ்... MLA பதவி லைசன்சா? அண்ணாமலை ஆவேசம்..!

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை தாக்கியவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். சமீப நாட்களாக கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடுபவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடுபவர்கள் மீதான தாக்குதலில் முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார். தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். பத்திரிகை, ஊடகங்கள் இல்லை என்றால் நாடு நாசமாகிவிடும் என்றும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: முக்கிய குற்றவாளியை காப்பாற்றும் கரூர் போலீஸ்... MLA பதவி லைசன்சா? அண்ணாமலை ஆவேசம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share