×
 

MLA பல்லவி - மேயர் பிரியா மோதல்..!! சட்டசபை வரை சென்ற பிரச்சனை..! DOT வைத்த சபாநாயகர்..!!

சட்டசபையில் எம்எல்ஏ பல்லவி - மேயர் பிரியா மோதல் குறித்து சபாநாயகர் பேசினார்

சென்னை திருவிக நகர் தொகுதியில் நடைபெற்ற ஒரு பள்ளி துவக்க விழாவில் ஏற்பட்ட சர்ச்சை சட்டப்பேரவை வரை சென்றுள்ளது. இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிகழ்வின்போது, குத்து விளக்கு ஏற்றும் போது மேயர் பிரியா தனக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று நடந்துகொண்டதாக தமிழக வெற்றிக் கழகம் எம்.எல்.ஏ. பல்லவி குற்றம் சாட்டினார். பல்லவி, மேயரின் செயல் தன்னை வேண்டுமென்றே அவமானப்படுத்தியது என்று கூறினார்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் வீடியோவாகப் பரவியதால், சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்துக்கு உள்ளானது. இந்த நிலையில், சட்டப்பேரவையின் மூன்றாம் நாள் அமர்வு என்று தொடங்கி நடைபெற்ற வருகிறது. முதலில் முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேகதாது விவகாரம், திருவள்ளூர் அமோனிய வாயு கசிவு விவகாரம் உள்ளிட்டவை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. மேகதாது விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் செய்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மேகதாது விவகாரம் குறித்து தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு சட்டசபையில் விவாதிக்க அனுமதி கிடையாது என்று சபாநாயகர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆணவம் எத்தனை நாளைக்கு நீடிக்கும்.? நாங்க பொறுமையா இருப்போம்... எம்எல்ஏ பல்லவி ஆதங்கம்..!!

தொடர்ந்து, தவெக MLA பல்லவி மற்றும் மேயர் இடையிலான மோதல் குறித்து சபாநாயகர் பேசினார். அப்போது மேயர் பிரியா அவமதித்த விவகாரம் தொடர்பாக, எம்எல்ஏ பல்லவி மனு கொடுத்திருப்பதாக சபாநாயகர் பிரபாகர் தெரிவித்துள்ளார். MLA பல்லவி கொடுத்த கடிதத்தில் தற்போது நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்ற சபாநாயகர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இதல்லவா விசுவாசம்..!! என் மகனுக்கு TVK-னு தான் பேரு வெப்பேன்..!! தவெக எம்.எல்.ஏ சுவாரசிய தகவல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share