×
 

தொகுதி பங்கீடு இழுபறி? மக்கள் நீதி மய்யம் கட்சி நாளை அவசர ஆலோசனை..!!

திமுகவுடன் தொகுதி பங்கீடு விவகாரம் குறித்து நாளை மக்கள் நீதி மய்யம் அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்தச் சூழலில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தொடர்பான முக்கியமான அரசியல் நகர்வு ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது.

திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் இந்த நேரத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சி நாளை அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டம், கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலை நேரத்தில் இக்கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அவசரக் கூட்டத்தின் முக்கிய நோக்கம், திமுகவுடனான சமீபத்திய தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளின் முடிவுகளை ஆராய்ந்து, கட்சியின் அடுத்தகட்ட நிலைப்பாட்டை வகுப்பதாகும்.

இதையும் படிங்க: திடீர் மாற்றம்..!! திமுக - மநீம உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..! பிப்.27ல் நடக்கும் என அறிவிப்பு..!!

சமீபத்தில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் பேச்சுவார்த்தைக் குழுவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்கள் ஏ.ஜி. மௌரியா, தங்கவேலு, பொதுச்செயலாளர் அருணாச்சலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்பேச்சுவார்த்தையில் மக்கள் நீதி மய்யம் கட்சி 12 முதல் 15 தொகுதிகள் வரை கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சி தரப்பில் விருப்பத் தொகுதிகளின் பட்டியலை சமர்ப்பித்துள்ளது. ஆனால், திமுக தரப்பில் 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முன்வந்ததாகவும், முழுமையடையவில்லை எனவும் தெரிய வருகிறது.

இதையும் படிங்க: கமல் பேசுனது ஸ்டாலினுக்கே ஷாக் ஆகி இருக்கும்... அவர அனுப்புனதே பெரிய தப்பு..! நக்கலடித்த தமிழிசை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share