திடீர் ட்விஸ்ட்... வந்தே பாரத் ரயிலில் கட்டுக் கட்டாய் சிக்கிய பணம்... பாஜக நிர்வாகியிடம் துருவி, துருவி விசாரணை ...!
வந்தே பாரத் ரெயிலில் முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூபாய் 10 லட்சத்து 50 ஆயிரம் கொண்டு வந்ததாக பாஜக நிர்வாகியிடம் 8 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை செய்தனர்.
பாரதிய ஜனதா கட்சியின் நெல்லை மண்டல பொறுப்பாளராக இருப்பவர் நீல முரளி யாதவ். இவர் சென்னையில் இருந்து வந்தே பாரத் ரயில் மூலமாக நெல்லைக்கு வந்துள்ளார். இந்நிலையில் எவ்வித ஆவணம் இல்லாமல் அவர் ரயில் மூலமாக பணத்தை எடுத்து செல்வதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, திண்டுக்கலில் இருந்து தனிப்படை போலீசார் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் ரெயில் நின்ற போது திண்டுக்கல் மற்றும் கோவில்பட்டி தனிப்படை போலீசார் நீல முரளி யாதவ்வினை சோதனை செய்த போது அவரிடம் 10 லட்சத்து 50 ஆயிர ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பாஜக நிர்வாகியிடம் பணம் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் நீல முரளி யாதவ்வினை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: S.I R. சட்டவிரோதம்... மக்களவையில் ராகுல் காந்தி ஃபயர் ஸ்பீச்...!
இது குறித்து தகவல் கிடைத்ததும் பாஜகவினர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் முன்பு குவிந்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து கோவில்பட்டி டிஎஸ்பி தலைமையில் நீல முரளி யாதவ்விடம் 6 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். தான் கொண்டு வந்த பணம் கட்சி நிகழ்ச்சிக்கு செலவழிக்க கொண்டு வந்த பணம் என்றும் அதற்கான ஆதாரங்களை அவர் கொடுத்ததை தொடர்ந்து போலீசார் அவரை விடுவித்தனர்.
இதையடுத்து பாஜக நிர்வாகி நீல முரளி யாதவ் கூறுகையில் : சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்து கொண்டிருந்த போது திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் 15 க்கு மேற்பட்டவர் தான் இருந்த பெட்டியில் ஏறினர் அதில் நான்கு பேர் மட்டும் காவல்துறை சீருடை அணிந்தனர். என்னுடைய சூட்கேஸ், பேக் உள்ளிட்டவர்களை சோதனையிட வேண்டும் என்று கேட்டனர். நானும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன்.
என்னுடைய சூட்கேசில் கட்சி நிதி 10 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க பணம் வைத்திருந்தேன். அதை கைப்பற்றிய போலீசார் என்னிடம் விசாரணை நடத்தினர். அந்தப் பணம் நெல்லை மண்டலத்தில் உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளில் SIR தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுக்கு திருமண மண்டபங்களை பிடித்து வரும் 12 முதல் 15ந்தேதி பயிலரங்கம் நடத்துவதற்காக திருமண மண்டபத்திற்கு வாடகை பணம் கொடுப்பதற்கு இந்த பணத்தைக் கொண்டு செல்வதாகவும், அதற்கான ஆவணங்களை கொடுத்த போதிலும் காவல்துறையினர் கேட்கவில்லை.
திடீரென கோவில்பட்டி ரயில்வே நிலையம் வந்ததும் பின்னர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் இறங்கி விட்டனர். பின்னர் 6 மணி நேர விசாரணைக்குப் பின்னர் விடுவித்து பணத்தை ஒப்படை த்தனர் என்றார்
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தீபம்… அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆஜராக அதிரடி உத்தரவு…!