×
 

திருப்பரங்குன்றம் தீபம்… அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆஜராக அதிரடி உத்தரவு…!

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் சுப்ரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியில் உள்ள 'தீபத்தூண்' எனப்படும் உயரமான கோபுரத்தில், கார்த்திகை தீபத் திருவிழாவின் போது தீபம் ஏற்றுவது கோயில் நிர்வாகத்தின் நீண்டகால பாரம்பரியமாக உள்ளது. இது 1996, 2014, 2017 ஆகிய ஆண்டுகளில் நீதிமன்றங்களால் அனுமதிக்கப்பட்டது. ஆனால், இந்த தீபத்தூண் சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகில் அமைந்துள்ளதால், சில இஸ்லாமிய அமைப்புகள் இது தங்கள் மத இடத்தை அவமதிப்பதாக எதிர்த்து வந்தன. 

மதுரையின் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது தீப ஏற்றம் போன்ற பாரம்பரிய வழிபாட்டு நிகழ்வுகளுக்காக அறியப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு கார்த்திகை தீபம் ஏற்றம் தொடர்பான ஒரு சிறிய சர்ச்சை, மாநில அரசு, நீதிமன்றம், மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையே கடுமையான மோதலாக மாறியது.

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தீபம் ஏற்றப்படவில்லை. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் விட்டதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை நடத்தப்பட்டது. நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் வழக்கை விசாரித்து வந்தார்.

இதையும் படிங்க: நல்லது நினைச்சிருந்தா தமிழ்நாடு நாசமாகி இருக்குமா... சாடிய நயினார்...!

இந்த நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோ காணொளி வாயிலாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். வரும் 17ஆம் தேதி காணொளி காட்சி வாயிலாக இருவரும் ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை பிறப்பித்துள்ளது. 

இதையும் படிங்க: உச்சக்கட்ட ஷாக்...!! எஸ்.ஐ.ஆர். மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கம்... பகீர் கிளப்பும் அண்ணாமலை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share