அடச்சீ... தாயா? இல்ல பேயா?... துடிக்க துடிக்க பெற்ற மகளுக்கு அம்மாவே செய்த கொடூரம்...!
திருத்தணி அருகே பெற்ற தாய் உதவியுடன் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணி அருகே சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு உடந்தையாக செயல்பட்ட சிறுமியின் தாய் மற்றும் இளைஞர் ஆகியோரை போக்சோ தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பட்டாபிராமபுரம் ஊராட்சி ஆசிரியர் நகர் சேர்ந்தவர் சரிதா(35) அவரது கணவர் விநாயகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் 9ம் வகுப்பு படித்து வரும் அவரது மகளுடன் வசித்து வந்தார்.சரிதாவுக்கு தூரத்து உறவுமுறை என்று கூறப்படும் முருக்கம்பட்டு சேர்ந்தராமச்சந்திரன்(30) என்ற இளைஞர் அடிக்கடி சரிதா வீட்டிற்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமியை கட்டாயப்படுத்தி அவரது தாய் உதவியுடன் ராமச்சந்திரன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அவருக்கு மகளை திருமணம் செய்துவைக்க சரிதா முயற்சி செய்து வந்துள்ளார்.இந் நிலையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புஅலுவலகத்திற்கு கட்டணமில்லா அலைபேசியில் சிறுமி தொடர்பு கொண்டு புகார் செய்துள்ளார்.
இதையும் படிங்க: அதிகாலையில் நடந்த அதிர்ச்சி... கஞ்சா போதையில் கதவைத் தட்டி 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை...!
இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் மாலா திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மலர், சிறுமியின் தாய் சரிதா, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ராமச்சந்திரன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
பெற்ற மகளை இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ய உடந்தையாக இருந்து சிறுமிக்கு திருமணம் செய்துவைக்க முயன்றது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து சரிதா, ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் போக்சோ தடுப்பு சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமியை திருவள்ளூரில் குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு பெற்ற தாய் உடந்தையாக செயல்பட்டது திருத்தணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 60 வயசு பெருசு செய்யுற காரியமா இது?... தனிமையில் இருந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை...!