சீமானின் ஆமைக்கறி கதை.. உண்மையை உடைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்..!
சீமானின் ஆமைக் கறி கதை பொய் என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுனா கூறினார்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா சமீபத்தில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர் சீமான் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இந்த விமர்சனங்கள் தமிழ்நாடு மற்றும் இலங்கை தமிழ் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அர்ஜுனாவின் பேச்சு, சீமானின் தமிழ் தேசிய அரசியல், ஈழத் தமிழர் பிரச்சனை மற்றும் அவரது கடந்தகாலக் கூற்றுக்களை மையப்படுத்தியது.
இது வெறும் தனிப்பட்ட தாக்குதலாக மட்டுமல்லாமல், ஈழத் தமிழர்களின் துயரத்தை அரசியல் லாபத்துக்குப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டும் வகையில் இருந்தது.
அர்ஜுனா தனது பேச்சில் முக்கியமாக இரு பெரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். முதலாவதாக, இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்களை சீமான் சந்தித்து உதவி செய்யவில்லை என்பது. “இலங்கையில் இருந்து வந்த மக்களை சந்தித்து ஒரு வேளை சாப்பாடு கூட சீமான் கொடுத்ததில்லை” என்று அவர் கூறினார்.
ராமேஸ்வரம் பகுதியில் இடம்பெயர்ந்த ஈழத் தமிழர்களை நான்கு முறை சந்தித்ததாகக் கூறும் சீமானுக்கு எதிராக இந்தக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அந்த மக்களிடமிருந்து கோடிக்கணக்கான பணத்தை பெற்றதாகவும், அதை தனது அரசியலுக்குப் பயன்படுத்தியதாகவும் அர்ஜுனா குற்றம் சாட்டினார்.
இரண்டாவதாக, சீமான் தனது பேச்சுகளில் அடிக்கடி குறிப்பிடும் “ஆமைக்கறி” சம்பவத்தை முழுமையான பொய் என்று அர்ஜுனா தாக்கினார்.
இதையும் படிங்க: “தம்பி”..! முதல்வர் விஜயை வாசலிலேயே ஆரத்தழுவி வரவேற்ற சீமான்..!
சீமான், பிரபாகரனைச் சந்தித்தபோது அவரிடமிருந்து ஆமைக்கறி பெற்றதாகவும், அதை வீட்டுக்கு எடுத்துச் சென்றதாகவும் கூறியிருந்தார். அர்ஜுனா இதை “ஆமைக்கறி கதை எல்லாமே பொய்” என்று நிராகரித்தார். ஒரு ஆமையிலிருந்து எடுக்கும் இறைச்சியின் அளவு மிகக் குறைவு என்பதைச் சுட்டிக்காட்டி, 300 கிலோ ஆமைக்கறி என்றால் ஆயிரக்கணக்கான ஆமைகளைப் பிடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: அரசியலின் பெரும் திருப்புமுனை..! தமிழக முதல்வராகும் விஜய்க்கு சீமான் வாழ்த்து..!