×
 

"பராசக்தி" தேர்தல் முரசொலி... தமிழ் தீ பரவட்டும்...! கமல்ஹாசன் MP பெருமிதம்..!

பராசக்தி படம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கமல்ஹாசன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம், தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இப்படம் 1960களில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்களை மையப்படுத்திய வரலாற்று அரசியல் நாடகமாக உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் ஒரு கல்லூரி மாணவராக நடித்துள்ளார், அவருடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம், டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டதில் இருந்தே சில சர்ச்சைகள் எழுந்தன. படத்தின் மிகப்பெரிய சிக்கல் தணிக்கை வாரியத்தில் (CBFC) ஏற்பட்டது. நீண்ட இழுத்தடிப்பு செய்த பிறகு நேற்று தணிக்கை சான்று கிடைத்த நிலையில் பராசக்தி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. பராசக்தி படத்தைப் பார்க்கத் தொடங்கும் முன் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை இந்தப் படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது என்று என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்தப் படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல, என் உண்மையான வாழ்த்தும் கூட. இந்தப் படம் திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம் என்றும் தெரிவித்து உள்ளார். பின்குறிப்பு என கூறிய கமல்ஹாசன், பின்னால் வந்தாலும் முந்திச் சொல்ல வேண்டியது. உணர்ச்சி முந்திக்கொண்டதால் பின்தங்கிய குறிப்பு இது. முதல் பாராட்டு இந்த பயோஃபிக் ஷன் கதையையும், இதன் இயக்குனர் சுதா கொங்கராவையும், இக்கதையைத் தேர்ந்து இதற்காக உழைத்து வெற்றியும் காணப்போகும் சிவகார்த்திகேயனையும் சேரும் என்றார்.

இதையும் படிங்க: கூவம் முகத்துவாரத்தில் நீர் மேலாண்மை கட்டடம்... துணை முதல்வர் திறந்து வைத்து சிறப்பிப்பு...!

இந்தச் சினிமாச் சரித்திரத்தில் இணைந்துவிட்ட ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும், ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், எடிட்டர் சதீஷ் சூரியா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மற்றும் இந்தப் படத்துக்காக உழைத்த அனைவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள் என்று கூறினார். 

இதையும் படிங்க: மீண்டும் 2.0 திராவிட மாடல்தான்... இளைஞரணிக்கு அதிமுக்கியத்துவம்... அதகளப்படுத்தும் திமுக...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share