"மலிவான அரசியல்"... காங்கிரஸ் மீது திடீர் தாக்குதல் ஏன்..? K.N. நேரு மீது மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு..!
முன்னாள் அமைச்சர் கே. என். நேரு மீது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் கே என் நேரு மலிவான அரசியலை நடத்துவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டினார். மேகதாதுவில் அணை கட்டும் புதிய விரிவான திட்டத்தை ஒன்றிய அரசிடம் வழங்கப் போவதாக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் சொல்லி இருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றும் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் டி.கே.சிவக்குமார் சொல்லி இருப்பது அவரது ஆணவப் போக்கைக் காட்டுகிறது எனவும் கே. என். நேரு தெரிவித்திருந்தார்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்து விட்டது பலவீனமான கூட்டணி அரசுதானே அமைந்துள்ளது என்ற எண்ணத்தில் சிவக்குமார் இப்படி பேசி இருப்பது போலத் தெரிகிறது. தங்களது காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் அங்கம் வகிப்பதால் எதிர்ப்பு இருக்காது என்று நினைத்து, துடுக்குடன் வார்த்தைகளை விட்டுள்ளார் அவர். மேகதாதுவில் அணை கட்டும் விஷயத்தில் கர்நாடக அரசு உறுதியாக இருப்பதாக சிவக்குமார் சொல்லி இருக்கிறார் என்றும் கூறினார்.
காவிரி நதியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட எங்கள் கழகத் தலைவர் எந்தவிதத் தியாகம் செய்யவும் தயங்க மாட்டார். மேகதாது அணையைக் கர்நாடகம் கட்டுவது என்பது, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் துரோகம் என்றும் கூறினார். முன்னாள் அமைச்சர் கே. என். நேரு மீது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: முதுகில் குத்திய காங்கிரஸ்..!! திமுக இளைஞரணி கூட்டத்தில் ஒலித்த 'காங்கிரஸ் ஒழிக' கோஷம்..!!
நாட்களுக்கு முன் நாங்கள் உங்களுடன் இருந்தபோது எந்த குற்றச்சாடடும் இல்லை. இன்று திடீரென காங்கிரஸை குறிவைக்கிறீர்கள். இது மலிவான அரசியல் என்று தெரிவித்தார். கர்நாடக தலைவர்கள் தங்கள் மக்களுக்காக போராடுகிறார்கள் என்றும் தமிழ்நாடு காங்கிரஸும் தமிழக விவசாயிகளுக்காக எப்போதும் நிற்கும். போராடும். காவிரி உரிமையை காக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம் எனவும் தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் வாழபாடியார் மத்திய அமைச்சர் பதவியை துறந்த வரலாற்றை மறக்க வேண்டாம் என்றும் இந்த மலிவான அரசியல் வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் இல்லாத தூத்துக்குடி மாவட்டமாக மாற்றிக் காட்டுவேன்!! முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சபதம்!