×
 

சாகித்ய அகாதமி சர்ச்சை... ஆய்வுக்கு உட்படும் இலக்கிய மதிப்பீடு... MP சு. வெங்கடேசன் கண்டனம்...!

அதிகாரத்துவ ஆய்வுக்கு இலக்கிய மதிப்பீடு உட்படுத்தப்படுவது குறித்து மத்திய அமைச்சருக்கு MP சு. வெங்கடேசன் கடிதம் எழுதி உள்ளார்.

இலக்கிய மதிப்பீடு என்பது நிதி அல்லது நடைமுறை சார்ந்த பரிவர்த்தனை அல்ல என்றும் அது நிபுணத்துவம், சக படைப்பாளிகளின் மதிப்பீடு மற்றும் கல்விசார் நேர்மை ஆகியவற்றின் அடிப்படையிலான ஒரு அறிவுசார் பயிற்சி என்றும் MP சு. வெங்கடேசன் கூறினார். இதனை அதிகாரத்துவ ஆய்வுக்கு உட்படுத்துவது என்பது நிறுவனத்தின் தன்னாட்சி அதிகாரத்தை ஆக்கிரமிப்பதற்கும், கருத்து சுதந்திரத்தை சிதைப்பதற்கும் சமம் என்றும் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும், சாகித்ய அகாதமி விருது பெற்றவர் என்ற முறையிலும், 2025-ஆம் ஆண்டுக்கான விருதுகள் தொடர்பாக சாகித்ய அகாதமியின் தேசிய செயற்குழுவின் முடிவுகளில் கலாச்சார அமைச்சகம் அண்மையில் மேற்கொண்டுள்ள தலையீடு குறித்து ஆழ்ந்த கவலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

சாகித்ய அகாதமி வரலாற்றில் இதுவரை எந்தவொரு காலக்கட்டத்திலும், நிபுணர் குழுக்களால் எடுக்கப்பட்ட இலக்கியத் தீர்ப்புகள் நிர்வாகத் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டதில்லை என்றும் இதனை அதிகாரத்துவ ஆய்வுக்கு உட்படுத்துவது என்பது நிறுவனத்தின் தன்னாட்சி அதிகாரத்தை ஆக்கிரமிப்பதற்கும், அகாதமியின் நோக்கத்தைச் சிதைப்பதற்கும் சமம் என்றும் கூறினார். 

இதையும் படிங்க: தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக, ஒத்துஊதும் அதிமுக..! திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு...!

இலக்கியத்தை நிர்வாகத் தலையீடுகளிலிருந்து பாதுகாப்பதற்காகவே சாகித்ய அகாதமி ஒரு தன்னாட்சி அமைப்பாக உருவாக்கப்பட்டது என்றும் நடுவர் குழுவின் முடிவுகளை மீறவோ அல்லது மறுபரிசீலனை செய்யவோ எடுக்கும் எந்தவொரு முயற்சியும் இந்தத் தன்னாட்சியின் மையப்பகுதியைத் தாக்குவதோடு, கருத்து சுதந்திரத்தை சிதைப்பதாகும் எனவும்பாஇத்தகைய தலையீடுகளை எதிர்கொள்ளும் வேளையில் அகாதமி தொடர்ந்து மௌனம் காப்பது வருத்தமளிப்பதோடு, அதன் புகழ்பெற்ற பாரம்பரியத்திற்கு முரணானதாகவும் உள்ளது என்றும் தெரிவித்தார். எனவே, அமைச்சகம் தனது தலையீட்டை உடனடியாகத் திரும்பப் பெறவும், நடுவர் குழு முடிவுகளின் மீதான தணிக்கை அல்லது மறுபரிசீலனை நடவடிக்கைகளைக் கைவிட வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்... டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடும் இபிஎஸ்... விளாசிய முதல்வர்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share