தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? ஆளுநர் பங்கேற்கும் விழாவில் நெல்லை பல்கலைக்கழகத்தின் புதிய நடைமுறை!
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்தைத் தொடர்ந்து மூன்றாவதாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் எனக் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா வரும் ஜூலை 28-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், விழாவின் தொடக்கத்தில் வந்தே மாதரம், தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் எனப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நெள்ளையில் செய்தியாளர்களைச் சந்தித்த துணைவேந்தர் சந்திரசேகர், பட்டமளிப்பு விழா ஏற்பாடுகள் குறித்து விரிவாகப் பேசினார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா வரும் ஜூலை 28-ஆம் தேதி சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது. இதில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குகிறார்.
இதையும் படிங்க: சென்னை ஐஐடி-யின் 63-வது பட்டமளிப்பு விழா! 3,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய ஜான்சிபார் அதிபர்!
பட்டம் பெறுவோர்: ஆண்டில் மொத்தம் 37,877 மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். மேலும், துறை சார்ந்த முக்கியப் பிரமுகர்களுக்கும் கௌரவப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
பட்டமளிப்பு விழா நடைமுறைகள் குறித்துப் பேசிய துணைவேந்தர் நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் பங்கேற்பதால், பட்டமளிப்பு விழாவின் தொடக்கத்தில் முதலாவதாக 'வந்தே மாதரம்' பாடலும், அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும், மூன்றாவதாக 'தமிழ்த்தாய் வாழ்த்தும்' முறைப்படி பாடப்படும்.
விழாவிற்கான அனைத்துப் பாதுகாப்பு மற்றும் அமைப்புச் சார்ந்த ஏற்பாடுகளும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் சிறப்பாகச் செய்யப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணியில் தவெகவின் குதிரை பேரம்! ஆளுநரிடம் டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி புகார்!