×
 

டிஎஸ்பி சுந்தரேசன் இப்படிப்பட்டவரா? - வெளியானது பகீர் குற்றச்சாட்டு...!

இன்று அவரது Service Record-ல் உள்ள முந்தைய ஆண்டுகளின் தண்டனை விபரம் குறித்த தரவுகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் காவல்துறை அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் மதுவிலக்கு டிஎஸ்பியாக பணியாற்றும் சுந்தரேசன், தனக்கு வழங்கப்பட்ட காவல் வாகனம் அதிகாரிகளால் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டி உயர் அதிகாரிகளின் மீது பல்வேறு புகார்களை அடுக்கி இருந்த நிலையில், இன்று அவரது Service Record-ல் உள்ள முந்தைய ஆண்டுகளின் தண்டனை விபரம் குறித்த தரவுகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் காவல்துறை அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 2005-2006-ஆம் ஆண்டுகளில் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் பணியாற்றியபோது இரண்டு வழக்குகளில், வழக்கின் விபரங்களை முறையற்ற நிலையில் ஒழுங்கீனமாக வைத்திருந்ததற்காக மூன்று ஆண்டுகள் ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

வழக்கு விபரங்களை மறைத்து பாஸ்போர்ட் வழங்க பரிந்துரை செய்ததால் 2008-இல் துரைப்பாக்கம் காவல் நிலைய பகுதியில் திருட்டு சிடி விற்பனை செய்ய அனுமதித்து அவர்களிடம் ரூ.40,000 கையூட்டு பெற்றது தொடர்பான வழக்கில் ஒரு வருடம் ஊதிய உயர்வு நிறுத்திவைப்பு

இதையும் படிங்க: பாகிஸ்தானை புரட்டிப்போடும் கனமழை.. 24 மணி நேரத்தில் 63 பேர் உயிரிழப்பு..!

2008-ஆம் ஆண்டு ஜெ2 துரைப்பாக்கம் காவல் நிலைய எல்லையில் முடிவுற்ற வழக்குகளை சுட்டிக்காட்டி குண்டத் தடுப்புச் சட்டத்தில் அடைக்காமல் இருப்பதாக அச்சுறுத்தி ரூ.40,000 கையூட்டு பெற்றதாக ஊதிய உயர்வு நிறுத்திவைப்பு

2008 ஆம் ஆண்டு டாஸ்மாக் மேலாளர் இருவரிடம் மாதம் ரூ.3000 கையூட்டு பெற்றது. அதே ஆண்டு காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வந்த பெண்ணிடம் கள்ளத்தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று வந்தது ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு அளிக்கப்பட்ட துறை ரீதியான தண்டனை விபரங்கள் Unofficial ஆக வெளியிடப்பட்டுள்ளது. 

இதில் 2008-ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் மீது எந்த குற்றச்சாட்டும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 2340 ஆசிரியர்களுக்கு நிரந்தர பணி.. சீக்கிரமே நல்ல சேதி வரும்! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share