×
 

ரயில் பயணிகள் கவனத்திற்கு! தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 5 நாட்களுக்கு புறநகர் ரயில்கள் ரத்து!

சிங்கப்பெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே பராமரிப்புப் பணி காரணமாக நாளை முதல் ஏப்ரல் 16 வரை ரயில் சேவையில் மாற்றம்.

சென்னை எழும்பூர் - விழுப்புரம் ரயில்வே பிரிவில், சிங்கப்பெருமாள் கோவில் மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெறவுள்ள அத்தியாவசியப் பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (ஏப்ரல் 12) முதல் ஏப்ரல் 16-ஆம் தேதி வரை புறநகர் மின்சார ரயில் (EMU/MEMU) சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஏப்ரல் 12 (ஞாயிற்றுக்கிழமை)  முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள் நாளை காலை 09:35 மணி முதல் நண்பகல் 12:05 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கீழ்க்கண்ட ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன:  வண்டி எண் 66045: தாம்பரத்தில் இருந்து காலை 09:40-க்குப் புறப்படும் விழுப்புரம் MEMU ரயில். வண்டி எண் 40754: காஞ்சிபுரத்தில் இருந்து காலை 09:30-க்குப் புறப்படும் சென்னை கடற்கரை செமி ஃபாஸ்ட் (Semi Fast) புறநகர் ரயில்.

ஏப்ரல் 12 - பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள் நாளை காலை நேரத்தில் இயக்கப்படும் பல ரயில்கள் செங்கல்பட்டு வரை செல்லாமல் வழியிலேயே நிறுத்தப்படும்: கடற்கரை - செங்கல்பட்டு ரயில்கள்: காலை 08:10, 08:50, 09:30 மற்றும் 10:00 மணிக்குக் கடற்கரையிலிருந்து புறப்படும் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் அல்லது காட்டாங்குளத்தூர் உடன் நிறுத்தப்படும். செங்கல்பட்டு - கடற்கரை ரயில்கள்: காலை 08:45, 09:40, 10:40 மற்றும் 11:35 மணிக்குச் செங்கல்பட்டிலிருந்து புறப்பட வேண்டிய ரயில்கள், சிங்கப்பெருமாள் கோவில் அல்லது காட்டாங்குளத்தூரில் இருந்துதான் புறப்படும். விழுப்புரம் - கடற்கரை: மதியம் 01:30-க்குப் புறப்படும் விழுப்புரம் MEMU ரயில், விழுப்புரம் - தாம்பரம் இடையே ரத்து செய்யப்பட்டு, தாம்பரத்தில் இருந்து மட்டுமே இயங்கும்.

இதையும் படிங்க: சென்னை எழும்பூரில் மீண்டும் மின்சார ரயில் சேவை..! திட்டமிட்ட காலத்திற்கு முன்பே பணிகள் நிறைவு!

ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 16 வரை (திங்கள் முதல் வியாழன்) இப்பணிகள் வரும் வியாழக்கிழமை வரை நீட்டிக்கப்படுவதால், மதியம் 01:20 மணி முதல் 03:20 மணி வரை இயக்கப்படும் ரயில்களில் மாற்றங்கள் இருக்கும்: கடற்கரை - செங்கல்பட்டு: காலை 11:40, மதியம் 12:28, 12:40 மற்றும் 01:45 மணிக்குக் கடற்கரையிலிருந்து புறப்படும் ரயில்கள் செங்கல்பட்டு வரை செல்லாது (சிங்கப்பெருமாள் கோவில்/காட்டாங்குளத்தூரில் நிறுத்தப்படும்). செங்கல்பட்டு - கடற்கரை: மதியம் 01:10, 01:45, 02:20 மற்றும் 03:05 மணிக்குச் செங்கல்பட்டிலிருந்து புறப்பட வேண்டிய ரயில்கள், சிங்கப்பெருமாள் கோவில் அல்லது காட்டாங்குளத்தூரில் இருந்துதான் இயக்கப்படும்.

பராமரிப்புப் பணிகள் காரணமாகச் செங்கல்பட்டு மார்க்கமாகச் செல்லும் பயணிகள், இந்த நேர மாற்றங்களைக் கருத்தில் கொண்டு தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறு சென்னை ரயில்வே கோட்டம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வண்டலூர் பூங்காவில் 10 நாட்கள் தடை! சிங்கம் மற்றும் மான் பகுதிகளுக்கு செல்ல அனுமதி மறுப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share