மாணவி கொலை விவகாரம்...! குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு நீதிமன்ற காவல்..!!
தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் கைதாகி உள்ள தர்ம முனீஸ்வரனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் அருகேயுள்ள வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் டூ படித்து வந்த 17 வயது மாணவி ஒருவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. கடந்த மார்ச் 10-ஆம் தேதி அந்த மாணவி திடீரென வீட்டை விட்டு மாயமானார்.
மறுநாள் மார்ச் 11-ஆம் தேதி கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் அவரது சடலம் ஆடைகள் களைந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் உள்ளூர் மக்களையும் பொதுமக்களையும் பெரிதும் பாதித்தது. தூத்துக்குடி காவல்துறை உடனடியாக விசாரணையைத் தொடங்கியது. மாணவியின் உடலில் இருந்து சில தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
குற்ற இடத்திற்கு அருகில் கிடந்த ஒரு திருட்டு பைக்கும் முக்கிய தடயமாக அமைந்தது. அந்த பைக் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரை அவரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பின்னர் அவர் முதற்கட்ட விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தூத்துக்குடி எஸ்பி மதன் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: +2 மாணவியின் கொடூர கொலை... குற்றவாளி முனீஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜர்..!! தீவிர விசாரணை..!!
மாணவியின் நகத்துக்குள் இருந்த தடயங்கள், டிஎன்ஏ சோதனை உள்ளிட்ட அறிவியல் ஆதாரங்களும் விசாரணையை வலுப்படுத்தியுள்ளன. தர்ம முனீஸ்வரனை முழு உடல் பரிசோதனைக்கும் அழைத்துச் சென்ற பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த நிலையில் தர்மமுனீஸ்வரனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: மாணவியின் கொடூர கொலை..! குற்றவாளி கைது செய்யப்பட்டதால் உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள்..!!