+2 மாணவியின் கொடூர கொலை... குற்றவாளி முனீஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜர்..!! தீவிர விசாரணை..!!
பிளஸ் டூ மாணவியை கொலை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி முனீஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக காமக்கொடூரன் தர்ம முனீஸ்வரன் என்பவரால் கொலை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி கடந்த பத்தாம் தேதி தனது வீட்டிலிருந்து இரவு ஏழு மணி அளவில் வீட்டு அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதைக்கு சென்றுள்ளார் பின்னர் மாணவி வீடு திரும்பவில்லை. இதை தொடர்ந்து கிராம மக்கள் மற்றும் மாணவியின் பெற்றோர் கிராமம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் தீவிரமாக தேடினர். இருப்பினும் மாணவி கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து கடந்த 11ஆம் தேதி வேடநத்தம் கிராம காட்டுப் பகுதியில் மாணவியின் உடல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பல்வேறு இடங்களில் காயத்துடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என மாணவியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த கொலை வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் தலைமையில் நான்கு டிஎஸ்பிக்கள் தலைமையில் 10 தனி படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையின் அனைத்து தரப்புகளும் முடக்கிவிடப்பட்டு விசாரணை நடைபெற்றது. ஆனால் ஒன்பது நாட்கள் ஆகியும் குற்றவாளி கண்டுபிடிக்கப்படாமல் காவல்துறையினர் திணறி வந்தனர். பிறகு தர்ம முனிஸ்வரன் என்பவனை போலீசார் கைது செய்தனர். குற்றவாளி முனீஸ்வரனை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நள்ளிரவில் திடீரென அவருக்கு வயிற்று வலி வந்ததாக தெரிகிறது. இதை அடுத்து எட்டயபுரம் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு மீண்டும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: மாணவியின் கொடூர கொலை..! குற்றவாளி கைது செய்யப்பட்டதால் உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள்..!!
இந்த நிலையில், பிளஸ் டூ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த தர்ம முனீஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். நேற்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டதை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: சரித்திர பதிவேடு குற்றவாளி வெளியில் சுத்துற அளவுக்கு மெத்தனம்..! கேள்விகளால் துளைத்த அண்ணாமலை..!!