#BREAKING: அதிர வைத்த +2 மாணவியின் கொடூரக் கொலை… முனீஸ்வரன் என்ற இளைஞர் கைது.!!
பிளஸ் டூ மாணவி பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முனீஸ்வரன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்புராஜ் இவரது மனைவி காளீஸ்வரி இவர்களது மூத்த மகள் தூத்துக்குடி குறுக்கு சாலை பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10 ஆம் தேதி தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு திரும்பிய மாணவி மாலை நேரத்தில் வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதைக்காக சென்றுள்ளார் இயற்கை உபாதைக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் இரவு முழுவதும் கிராமம் முழுவதும் தேடியும் மாணவி கிடைக்கவில்லை.
இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர் ஆனால் குளத்தூர் காவல்துறையினர் விளாத்திகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க கூறியுள்ளனர் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் ஆய்வாளர் பிரவீனா முறையாக விசாரணை நடத்தாமல் அலட்சியமாக இருந்துள்ளார் மேலும் மாணவியின் நடத்தை குறித்து தவறாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்த நிலையில் 11-ம் தேதி மாலை வேடநத்தம் கிராமம் காட்டுப் பகுதியில் கொலை செய்யப்பட்ட மாணவி உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து 11ஆம் தேதி மாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் குறுக்குச்சாலை தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை கைது செய்ய 10 தனி படைகள் அமைக்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நபர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் பள்ளியில் உடன்படித்த மாணவர்கள் என 14 க்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். அதில் 5 பேரிடம் DNA மாதிரி சோதனை செய்யப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: இன்றோடு 8 நாள்..! தாமதமான நீதி.. மறுக்கப்பட்ட அநீதி..! மாணவி கொலை வழக்கில் அதிமுக அதிருப்தி..!!
இந்த நிலையில் விளாத்திகுளம் மாணவி பாலியல் கொலை வழக்கில் முனீஸ்வரன் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். சாயல்குடியைச் சேர்ந்த 30 வயதான முனீஸ்வரன் என்ற இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்து இருக்கின்றனர். செல்போன் சிக்னலை வைத்து முனீஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர். மூன்று பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் குற்றவாளியை விரைவில் அறிவிப்போம் என்று டி.ஐ.ஜி தெரிவித்துள்ளார். விசாரணை இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். படிப்படையாள் கைது செய்யப்பட்ட முனீஸ்வரன் மீது பல வழக்குகள் நிறுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பது நாளாக குற்றவாளியை கைது செய்யவில்லை என்று கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது இந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். முனீஸ்வரனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதற்காக அந்த இடத்திற்கு சென்றார், குற்றத்தை அந்த நபர் ஒப்புக்கொண்டதாக கூறப்படும் நிலையில் எதற்காக இந்த கொலை, இவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: +2 மாணவி மரண வழக்கு... திணறும் போலீஸ்..! உடலை வாங்க மறுத்து 7வது நாளாக போராட்டம்..!!