×
 

+2 மாணவி மரண வழக்கு... திணறும் போலீஸ்..! உடலை வாங்க மறுத்து 7வது நாளாக போராட்டம்..!!

+2 மாணவி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்புராஜ் இவரது மனைவி காளீஸ்வரி இவர்களது மூத்த மகள் தூத்துக்குடி குறுக்கு சாலை பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 10 ஆம் தேதி தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு திரும்பிய மாணவி மாலை நேரத்தில் வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதைக்காக சென்றுள்ளார் இயற்கை உபாதைக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் இரவு முழுவதும் கிராமம் முழுவதும் தேடியும் மாணவி கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர் ஆனால் குளத்தூர் காவல்துறையினர் விளாத்திகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க கூறியுள்ளனர் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் ஆய்வாளர் பிரவீனா முறையாக விசாரணை நடத்தாமல் அலட்சியமாக இருந்துள்ளார் மேலும் மாணவியின் நடத்தை குறித்து தவறாக விமர்சனம் செய்துள்ளார். 

இதையும் படிங்க: இனி Tuticorin அல்ல Thoothukudi... தூத்துக்குடி விமான நிலைய பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!

இந்த நிலையில் 11-ம் தேதி மாலை வேடநத்தம் கிராமம் காட்டுப் பகுதியில் கொலை செய்யப்பட்ட மாணவி உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து 11ஆம் தேதி மாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் குறுக்குச்சாலை தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

குற்றவாளிகளை கைது செய்ய 10 தனி படைகள் அமைக்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நபர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் பள்ளியில் உடன்படித்த மாணவர்கள் என 14 க்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். அதில் 5 பேரிடம் DNA மாதிரி சோதனை செய்யப்பட்டு இருக்கிறது. குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இந்த நிலையில், குற்றவாளிகளை கைது செய்யவில்லை எனக் கூறி 7வது நாளாக உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: +2 மாணவி படுகொலை... பிணவறையை முற்றுகையிட்ட உறவினர்கள்..! பதற்றம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share