"அவங்களுக்கு நாங்க இருக்கோம்"..! மறைந்த இசையமைப்பாளர் தேவா குடும்பத்தினருக்கு அமைச்சர் வன்னியரசு ஆறுதல்..!!
மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் குடும்பத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதுணையாக இருக்கும் என அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார்.
சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்போம் எனத் தெரிவித்துள்ளார். தேவாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அவர், தேவாவின் மகன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு ஆறுதல் கூறினார். தான் அமைச்சராகப் பதவியேற்றபோது தேவா தனக்கு தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்ததாக வன்னி அரசு நினைவுகூர்ந்தார்.
தேவாவை ஒரு காட்ஃபாதர் போன்றவராகக் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார். முதலமைச்சர் விஜய் அரசு சார்பில் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதற்கு நன்றி தெரிவித்த அவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேவாவின் குடும்பத்தினருக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.தேனிசைத் தென்றல் என அழைக்கப்பட்ட தேவா இன்று காலை மாரடைப்பால் காலமானார்.
அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்குப் பெரும் இழப்பாக அமைந்துள்ளது. திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், அமைச்சர் வன்னி அரசுவின் இந்த அறிக்கை குடும்பத்தினருக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: மாட்டுக் கறியா.? அமைச்சரவையே பார்க்க முடியாது..! வன்னியரசுக்கு கிருஷ்ணசாமி பகிரங்க எச்சரிக்கை..!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தேவாவின் குடும்பத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்ற உறுதிமொழியை அமைச்சர் வன்னி அரசு அளித்துள்ளார். தேவாவின் இசைப் பங்களிப்பைப் போற்றிய அவர், அவரது பாடல்கள் என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாணவன் பாரதிதாசன் விவகாரம்.. அரசியல் செய்கிறது திமுக..!! வன்னிஅரசு பகீர் குற்றச்சாட்டு..!!