தோல்வி காணாத நாயகர்.. போருக்கு முன்பே வாகை சூடுபவர்.. முத்தரையருக்கு தவெக தலைவர் விஜய் புகழாரம்!
முத்தரையரின் 1350வது சதய விழாவை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ் மொழியைக் காப்பதிலும், தமிழ் மொழியின் சிறப்புகளை கல்வெட்டுகளில் பதித்து , காலத்திற்கும் நிலைபெறச் செய்தவர் பெரும்பிடுகு முத்தரையர். கன்னித் தமிழை வளர்த்தவர்களில் முதன்மையாக இடம்பெறுபவர் பெரும்பிடுகு முத்தரையர். அவரது 1350 சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முத்தரையருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜய், தமிழ் நிலத்தில் போரில் வென்ற மன்னர்கள் வாகை மலர் சூடி மகிழ்வார்கள். அக்காலத்தில், தன்னுடைய போர்த்திற வெற்றியைத் தன்னம்பிக்கையுடன் உறுதி செய்து, போருக்குச் செல்லும் முன்பே வாகை மலர் சூடிச் சென்றவர், மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: DMK, BJP கூட நிச்சயமாக கூட்டணி இல்லை.. தமிழக வெற்றிக் கழகம் திட்டவட்டம்..!
தோல்வியே காணாத வரலாற்றுச் சிறப்புமிக்க வாகை நாயகர் என்றும் அரசர்களுக்கு எல்லாம் பேரரசராகத் திகழ்ந்த அரச வாகை கொண்ட பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பிறந்த நாளில், தமிழ் மண்ணுக்கும் தமிழர் உரிமைக்கும் அவர் ஆற்றிய சேவைகளைப் போற்றி மகிழ்வோம் எனவும் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதையும் படிங்க: எம் தொப்புள் கொடி உறவுகளுக்கு..! முள்ளிவாய்க்கால் நினைவு தின வீரவணக்கம் செலுத்திய விஜய்..!