தவெக அமைச்சர் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து அரங்கேறிய அவலங்கள்... அதிர்ச்சியில் மக்கள்...!
நாகையில் அமைச்சர் ஷாஜகான் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் திடீரென மின்வெட்டு ஏற்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.
நாகையில் அமைச்சர் ஷாஜகான் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் திடீரென மின்வெட்டு ஏற்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.
பவர் கட்:
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தலைமையில் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக இயற்கை இடர்பாடு முன்னேற்பாடு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை மாநாட்டு அரங்கில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போது திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் பதவி தப்பியது..! எடப்பாடி என்ன சொன்னாரு..? சபாநாயகர் பிரபாகர் பேட்டி..!!
சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ள கூட்டத்தில் மின்வெட்டு ஏற்பட்டதை சரிசெய்யும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அதற்கு இடைப்பட்ட தருணத்தில் எல்.இ.டி. திரை வெளிச்சத்தில் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தொடர்ந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மாவட்ட செயலாளருக்கு இருக்கை:
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தலைமையில் பேரிடர் முன்னேற்பாடு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அரசு விதியை மீறி அரசியல் எந்தவித பொறுப்பிலும் இல்லாமல் தமிழக வெற்றி கழகத்தின் நாகை மாவட்ட செயலாளர் சுகுமாரனுக்கு நாகை கோட்டாட்சியர் சங்கரநாராயணனுக்கு பக்கத்தில் இருக்கை அமைக்கப்பட்டிருந்தது.
மேடையில் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்ந்துள்ள நிலையில், கீழே அமர்ந்த மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் தவெக மாவட்ட செயலாளருக்கு இருக்கை அமைக்கப்பட்டது. இதே போல வேதாரணியம் தவெக வேட்பாளராக போட்டியிட்ட கிங்ஸ்லி ஜெரால்டு உள்ளிட்ட தவெக நிர்வாகிகளும் மாவட்ட அதிகாரிகளுடன் இருக்கைகளில் அமர்ந்தார்.
முன்னதாக கூட்டத்தில் பங்கேற்க மாநாட்டு அரங்கின் பிரதான கதவை தள்ளிக்கொண்டு தவெக துண்டுகளுடன் கட்சி தொண்டர்கள் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றனர். இதனால் அரசு அதிகாரிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை பெற வந்த பயனாளிகள் முகம் சுழித்தனர்.
சிக்கித் தவித்த எம்.எல்.ஏ.க்கள்:
தவெக தொண்டர்களின் அட்ராசிட்டியில் வெளியே கூட்டத்தின் உள்ளே செல்ல முடியாமல் நாகை மற்றும் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியே நீண்ட நேரம் காத்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் பலமுறை ஒலிபெருக்கியில் கூறியதை தொடர்ந்து போலீசார் தவெக தொண்டர்களை வெளியேற்றி சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளே அனுப்பி வைத்தனர்.
செய்தியாளர்களுக்கு அனுமதி இல்லை:
அமைச்சர் ஷாஜகான் ஆய்வுக் கூட்டத்தில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு, தவெக தொண்டர்களுக்கு துண்டுகளுடன் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது அங்கிருந்த மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க: முதல் வெளிநாட்டு பயணத்திலேயே சாதித்த அமைச்சர் கீர்த்தனா... உலக தரத்துக்கு மாறும் தூத்துக்குடி..!! புதிய ஒப்பந்தம்..!!