நாகர்கோயில் கைதி மரணத்தில் திடுக் திருப்பம்... லிஸ்ட் போட்டு தூக்கப்பட்ட 8 பேர்... யார் என்பதில் தான் ட்விஸ்ட்டே...!
சிறையில் உள்ள விசாரணை கைதிகள் 8 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று வார்டன்கள் கைது செய்யப்பட்ட நிலையில். சிறையில் உள்ள விசாரணை கைதிகள் 8 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு.
குமரி மாவட்டம் சாமிதோப்பு ஈத்தங்காடு பகுதியை சேர்ந்த சபரி வர்மன் குட்கா விற்பனை செய்ததாக தென் தாமரைக் குளம் போலீசார் அவரை கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தன. சிறையில் அடைக்கப்பட்ட சபரி வர்மனை நாகர்கோவில் சிறைச்சாலையின் முதன்மை சிறை வார்டன் களக்காடு பகுதியை சேர்ந்த திருமலை நம்பி, தேங்காய் பட்டணம் பகுதியை சேர்ந்த வார்டன் ஜெகன், சாமியார் மடம் பகுதியை சேர்ந்த வார்டன் சிவகுமார் ஆகியோரை நேசமணி நகர் காவல் நிலைய போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
சபரி வர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்த நிலையில் நீதிபதி முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதில் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: நாகர்கோயில் சிறை கைதி மரணத்தில் திடீர் திருப்பம்... அம்பலப்படுத்திய பிரேத பரிசோதனை அறிக்கை... 3 காவலர்கள் அதிரடி கைது...!
இந்த நிலையில் சிறையில் விசாரணை கைதி சபரி வர்மன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை கைதிகளாக இருந்து வரும் விஷ்ணு, சாரதி,ஜெகன்,சரத், பெருமாள்,சேதுராம், அஜித்,அரவிந்த் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக இவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சிறையில் நடந்தது என்ன?
கன்னியாகுமரி மாவட்டம் சாமி தோப்பு அருகே ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபரி வர்மன் (வயது 33), கடை நடத்தி வந்தார். இவர் கடையில் குட்கா விற்றதாக தென்தாமரைகுளம் போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் மருத்துவ பரிசோதனை முடித்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சபரி வர்மன் நேற்று காலை சிறையிலேயே மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பும், அடைக்கப்பட்ட மறுநாளும் நலமுடன் இருந்த சபரி வர்மன் திடீரென எப்படி இறந்தார்? என்பதில் மர்மம் நீடித்தது. இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரி முன் உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் பிரேத பரிசோதனை முடிவில் தான் சபரி வர்மனின் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என்று கூறி சமாதானம் செய்தனர்.
பிரேத பரிசோதனை முடிந்தால் மட்டுமே உண்மை தெரியவரும் என்ற நிலையில், அவரது உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு இன்று மாலையில் வெளியானது. அப்போது சபரி வர்மன் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. கை, கால், மார்பு, தலை என அனைத்து இடங்களிலும் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரத்தக்கட்டுகளும், விரலில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளன.
இதையும் படிங்க: இதுக்கு ஒரு என்டே இல்லையா?... இரவோடு இரவாக தெருவில் இறங்கிய மக்கள்... விஜய் ஆட்சிக்கு சிக்கல்...!
இதைப் பார்க்கும்போது சபரி வர்மனை சிறையில் வைத்து கொடூரமாகத் தாக்கியிருப்பது உறுதியானது. இதற்கிடையே போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் சிறைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி இருந்தார். அப்போது சபரி வர்மன் தாக்கப்பட்ட விவகாரம் ஓரளவுக்கு கசியத் தொடங்கியது. அப்போது முதன்மை சிறை வார்டன் திருமலை நம்பி, வார்டன்கள் ஜெகன், சிவகுமார் ஆகியோரை நேசமணிநகர் போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். இந்த நிலையில் தாக்கப்பட்டதால் தான் சபரி வர்மன் இறந்தது உறுதியானதை தொடர்ந்து முதன்மை வார்டன் உள்பட 3 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சிறையில் எதற்காக சபரி வர்மன் தாக்கப்பட்டார் என்பது குறித்த தெரியாத நிலையில், விசாரணை கைதிகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தலைமைச் செயலகத்தில் குவியும் த.வெ.க.வினர்... அமைச்சர்கள் அறைகளில் தள்ளுமுள்ளு?