புலி வருது, புலி வருது..! இதே கதைதான்... முதலீடுகள் தொடர்பாக முதல்வரை விளாசிய நயினார்...!
முதலீடுகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
முதலீடுகளை முதலமைச்சர் ஸ்டாலின் கோட்டை விடுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 1720 கோடி ரூபாய் முதலீடு செய்யவிருந்த தென்கொரிய நிறுவனம் ஹ்வாசங், தற்போது தமிழகத்தை விட்டு ஆந்திராவில் முதலீடு செய்யவிருப்பதாய் அறிவித்த சேதி அறிவீர்களா என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முதலமைச்சர் ஸ்டால் எனக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என்று வீண் பேச்சு பேசும் முதல்வர் அவர்களே, உங்கள் விடியா அரசாங்கத்தின் விளைவாகத் தான் தமிழக இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டிய 20,000 நேரடி வேலைவாய்ப்புகள் இன்று பறிபோயுள்ளன என்று குற்றம் சாட்டினார்.
புலி வருது, புலி வருது என்பது போல ஒவ்வொரு முறையும் தாங்கள் முதலீடு வருகிறது என்று விளம்பரம் வெளியிடுவதும், பின் அந்த முதலீடு அண்டை மாநிலத்திற்குச் சென்றுவிட்டதாய் செய்தி வருவதும் தொடர் கதையாகி வருகிறது என்று கூறினார்.
இதையும் படிங்க: திமுக வெறியாட்டத்திற்கு பாஜக அஞ்சாது...! நயினார் நாகேந்திரன் ஆவேசம்..!
முதலீட்டை ஈர்க்கிறேன் என வெளிநாடுகளுக்குப் பயணம் சென்றுவிட்டு வெறுங்கையுடன் திரும்புவது, தானாகக் கிடைத்த முதலீட்டையும் எந்தவொரு முயற்சியும் எடுக்காது கோட்டை விடுவது, தமிழகத்தின் எதிர்காலத்தைச் சிதைப்பது என மும்முரமாக இருக்கும் நீங்கள், மீண்டுமொரு முறை ஆட்சிக் கோட்டையைப் பிடித்து தமிழகத்தைத் தலை நிமிரச் செய்வேன் என்று கூறுவதை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது முதல்வரே என்று நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார்.
இதையும் படிங்க: "முதல்ல இட்லி தோசையை சாப்பிடுங்க... அப்புறம் சப்பாத்திக்கு போகலாம்..." - செய்தியாளரிடம் டென்ஷன் ஆன நயினார் நாகேந்திரன் ...!