சும்மா கவர்னரை சீண்டுனா அவ்ளோ தான்... உதயநிதிக்கு நயினார் பகிரங்க எச்சரிக்கை...!
ஆளுநரை விமர்சனம் செய்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில், சில வாசகங்கள் வெறும் சொற்களாக மட்டுமல்லாமல், ஒரு முழு இயக்கத்தின் உணர்வைத் தாங்கியிருக்கின்றன. அவற்றுள் ஒன்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மிக முக்கியமான போராட்ட வாசகம் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும். இந்த வாசகம், 1960களின் தீவிர அரசியல் போராட்டங்களின் சின்னமாகத் தோன்றியது, தமிழர்களின் சுயமரியாதை, மொழி உரிமை மற்றும் சமூக நீதிக்கான தாக்குதலைப் பிரதிபலிக்கிறது.
இது வெறும் ஒரு அழைப்பு வாசகம் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் அடையாளத்தை வலுப்படுத்திய, மக்களை ஒருங்கிணைத்த, வெற்றியின் உறுதியைத் தரும் ஒரு மந்திரமாகப் பரிணமித்தது. திமுகவின் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற வாசகத்தை குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாடு போராடும் என்று சுவர்களில் எழுதியுள்ளார்கள், யாருடன் போராடும் என்று ஆளுநர் கேள்வி எழுப்பி இருந்தார்.
தொடர்ந்து ஆளுநர் ரவி எழுப்பிய கேள்விக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் கொடுத்தார். மாநில உரிமை, சமூக நீதிக்காக தமிழ்நாடு போராடும் என்றும் மத்திய அரசை எதிர்த்து தமிழ்நாடு என்றும் போராடும் எனவும் பதில் கொடுத்துள்ளார். மதம், சாதி வெறி, ஹிந்தி திணிப்பு எதிர்த்து என்று தமிழ்நாடு போராடும் என்றும் கூறி இருந்தார்.
இதையும் படிங்க: எல்லா வேலையும் கரெக்ட்டா நடக்குதா..?? ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் துணை முதல்வர்..!!
இந்த நிலையில், ஆளுநர் மீது இனியும் வீண் குற்றச்சாட்டுகளை சுமத்தினால் பாஜக வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது என உதயநிதிக்கு நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். எஞ்சியிருக்கும் 7 மாதங்களில் ஆளுநரை அடிப்படையின்றி விமர்சிக்காமல், தமிழகத்தின் வளர்ச்சித் திட்டப் பணிகளில் கவனம் செலுத்துமாறு கூறி உள்ளார்.
இதையும் படிங்க: நடுவானில் உடைந்த விமான கண்ணாடி! பதறிப்போன பைலட்! 76 பேரின் உயிர் திக்!! திக்!!