×
 

அரசு பேருந்தா... எமனின் பாசக்கயிறா? திமுக அலட்சியத்துக்கு மக்கள் சாகணுமா?... நயினார் காட்டம்..!!

சேலத்தில் நடந்த விபத்தை சுட்டிக்காட்டி நயினார் நாகேந்திரன் திமுக அரசை சாடியுள்ளார்.

அரசுப் பேருந்தா அல்லது எமனின் பாசக்கயிறா சேலத்தில் நடந்த விபத்தை சுட்டிக்காட்டி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சேலம் அருகே அரியானூர் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து, தடுப்பைத் தாண்டி சரக்கு வாகனத்தில் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்ததுடன் மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது என கூறினார்.

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைக் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்தவர்கள் முழு மன மற்றும் உடல் நலத்துடன் விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டிக் கொள்வதாக கூறி உள்ளார். 

ஆளும் திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் தமிழகப் போக்குவரத்துத் துறையும் அதன் கீழ் இயங்கும் அரசுப் பேருந்துகளும் முற்றிலுமாகப் பழுதாகிக் கிடப்பதை நாம் பலமுறை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உள்ளதாகவும், மழைக்கும், காற்றுக்கும், வெயிலுக்கும், சிறு மேடு பள்ளங்களுக்கும் தாங்காத தகர டப்பாக்களை எல்லாம் “விடியல் பேருந்து” என்ற பெயரில் ஒட்டுப் போட்டு ஓட்டிக் கொண்டிருக்கும் திமுக அரசின் அலட்சியத்திற்கு ஏழை எளிய மக்கள் பலியாக வேண்டுமா என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: விஜய்க்கு 90 சீட்டா? ஆதவ் யாருனே தெரியாது... நயினார் பதிலடி..!!

தங்கள் ஊழல் கஜானாவை எப்படியாவது நிரப்பிட வேண்டும் என்ற ஒரே நோக்கில் அப்பாவிப் பொது மக்களின் உயிர்களை அடமானம் வைக்கத் துடிக்கும் திமுக போன்ற ஒரு தீயசக்தியைத் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள், இனி அரியணையில் ஏறவும் அனுமதிக்க மாட்டார்கள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: மருத்துவர் இல்லாததால் பறிபோன பிஞ்சு உயிர்... கதறிய பெற்றோர்..! நயினார் கண்டனம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share