காமவெறி மிருகங்களை வளர்த்து விடும் அறிவாலயம்... 2 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... கொந்தளித்த நயினார்..!!
காமவெறி மிருகங்களை அறிவாலயம் வளர்த்து விடுவதாக நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணந்தூரை சேர்ந்த 28 வயது சூர்யா ஓசூரில் கட்டிட வேலை செய்து வந்தார். அவரது மனைவி பிரின்சி இரண்டரை வயது பெண் குழந்தையுடன் கணவரை பிரிந்து கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் தாய் வீட்டுக்கு சென்றார். சூர்யா அவ்வப்போது குழந்தையை பார்க்க செல்வார். ஆனால் கடந்த டிசம்பர் 11-ம் தேதி பிரின்சியிடமிருந்து அதிர்ச்சி அழைப்பு வந்தது. "குழந்தைக்கு வலிப்பு வந்துவிட்டது, மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறேன்" என்று கூறிவிட்டு போன் வைத்துவிட்டார்.
ஆனால் மருத்துவமனையில் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்தனர். சூர்யா அதிர்ந்து போனார். குழந்தை இயற்கை மரணம் அடையவில்லை என்ற சந்தேகம் எழுந்தது. உடனடியாக அஞ்செட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் சந்தேசு மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கினர். பிரேத பரிசோதனை அறிக்கை மேலும் அதிர்ச்சி அளித்தது. குழந்தையின் உடலில் உள் காயங்கள், பாலியல் தொந்தரவு அறிகுறிகள் தெளிவாகத் தெரிந்தன. இதையடுத்து போலீசார் ஆழமான விசாரணை நடத்தினர். திடுக்கிடும் உண்மை வெளியானது.
பிரின்சி கணவரை பிரிந்த பிறகு அஞ்செட்டியைச் சேர்ந்த பெரியநாயகம் என்பவருடன் தொடர்பில் இருந்துள்ளார். பெரியநாயகம் திமுக இளைஞர் அணி கிளை செயலாளராக உள்ளவர். அவர் அடிக்கடி பிரின்சியை சந்திக்க அஞ்செட்டி வந்து சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் குழந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து அஞ்செட்டி போலீசார் பெரியநாயகத்தை கைது செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தர்மபுரி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: SCHOOL-ல கூட பாதுகாப்பு இல்ல..! இதுதான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா? நயினார் சரமாரி கேள்வி..!!
இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். காமவெறி பிடித்த மிருகங்களை அறிவாலயம் வளர்த்து விடுவதாக தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் 2 வயதே ஆன பெண் குழந்தையைத் திமுகவின் இளைஞரணி கிளைச் செயலாளர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றிருப்பதாக வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாகவும் ஆட்சி அரியணை ஏறிய ஐந்தாண்டுகளில், "திமுககாரன்" எனும் அடைமொழி வழங்கி, ஆளுங்கட்சி கர்வத்தை ஊட்டி வளர்த்து, பச்சிளம் குழந்தையைக் கூட விட்டுவைக்காமல், பாலியல் இச்சையில் வேட்டையாடும் கொடூர மிருகங்களை வளர்த்துவிடும் கூடாரமாகவே மாறிவிட்ட திமுக ஆட்சி ஒழிந்தால் மட்டுமே தமிழகத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கடைந்தெடுத்த ரவுடிகள்... கொலைகார கூடாரம் திமுக..!! கட்சிக்காரங்கள அடக்குங்க ஸ்டாலின்..! நயினார் விளாசல்..!!