×
 

வாயில் துணியை வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை... 7 ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடூரம்...! வலுக்கும் கண்டனம்..!!

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் தொடரும் மோசமான சூழ்நிலையில் தூய சக்தி குறட்டை விட்டு கொண்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் 10 பாலியல் வன்கொடுமைகள் நடந்த கொடூரத்தின் பதற்றம் தணியும் முன்பே, நேற்று செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே நிகழ்ந்த சம்பவம் பாதை பதைக்க செய்வதாக கூறினார்.

7ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி தாக்கி, வாயில் துணியை வைத்து அடைத்து இரு இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சைப் பதறச் செய்வதாக தெரிவித்துள்ளார். சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட சிறுமி முழு மன மற்றும் உடல் நலத்துடன் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்வதாகவும் கூறினார்.

கடந்த ஒரு மாத காலமாக, தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பெருகி வரும் பாலியல் வன்கொடுமைகளைப் பார்த்தால், பெண் பிள்ளைகளை வெளியில் அனுப்பவே அச்சம் உண்டாகிறது என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். விளையாடச் செல்லும் குழந்தைகளும், படிக்கப் போகும் பிள்ளைகளும், வீட்டில் தனியாக வசிக்கும் முதியோர்களும் பாதுகாப்பாக இருப்பார்களோ இல்லையோ என மக்கள் அன்றாடம் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு வாழ்வது தான் முதல்வர் விஜய் தம்பட்டம் அடித்த மாற்று அரசியலா? என்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: ஸ்டாலின் சட்டமன்றத்திற்கு வருவார்..! கே.என். நேரு சூசகம்... இடைத்தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்..!!

தன்னை நம்பி வாக்களித்த பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, முதல்வருக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் அவகாசம் வேண்டும்? என்று கேட்டுள்ளார். எனவே, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் இனியும் சமரசம் செய்யாமல், சீரழிந்த சட்டம் ஒழுங்கை சமன் செய்து, குற்றங்களைக் கட்டுக்குள் கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க: #அப்பாவ காணோம்..! அப்பா மக்கள் மனசுல இருக்காரு..! CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share