×
 

"ஆவின் பால் உற்பத்தி முடக்கம்"..! ஆரோக்கியத்தின் மீதான நேரடி தாக்குதல்... நயினார் கண்டனம்..!

ஆவின் பால் உற்பத்தியை முடக்குவது ஆரோக்கியத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார்.

ஆவின் பால் உற்பத்தியை முடக்குவது, மக்கள் ஆரோக்கியத்தின் மீது தொடுக்கப்படும் நேரடித் தாக்குதல் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். அதிக உற்பத்தி செலவின் காரணமாக, பெரும்பாலான நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ஆவினின் "கிரீன் மேஜிக்" பால் பாக்கெட்டுகளின் உற்பத்தி படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கூடிய விரைவில் அப்பால் பாக்கெட்டுகள் முழுமையாக நிறுத்தப்பட உள்ளதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் கடும் அதிர்ச்சி அளிப்பதாக கூறினார். 4.5% கொழுப்புச் சத்து கொண்ட ஆவின் கிரீன் மேஜிக் பால் பாக்கெட்டுகளின் விநியோகம் ஒருவேளை தடைபடுமானால், இதே அளவு கொழுப்புச் சத்து கொண்ட பாலை மக்கள் கூடுதல் விலை கொடுத்து தனியாரிடம் இருந்து வாங்கும் நிதி நெருக்கடிக்கு தள்ளப்படுவர் என்றும் எச்சரித்தார்.

இதனால் பால் நுகர்வு குறைவதோடு குழந்தைகள், முதியோர்கள் உள்ளிட்டவர்களின் ஆரோக்கியமும் பாழாகும். நடுத்தர மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான அரசின் இந்நடவடிக்கை ஏற்புடையதல்ல என்றார். எனவே, ஆவின் பாலின் கொழுப்புச் சத்து அளவைக் குறைப்பது, உற்பத்தியை முடக்குவது, விநியோகத்தை தடைபடுத்துவது, விலையை உயர்த்துவது உள்ளிட்ட முந்தைய அரசின் தவறுகளை, தற்போதைய தவெக அரசும் தொடரக் கூடாது என்றும் கூறினார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடியின் பொற்கால ஆட்சி..! புகழ்ந்த தள்ளிய நயினார் நாகேந்திரன்..!!

மக்களின் அடிப்படைத் தேவையான பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விநியோகம் தடையின்றி நடக்கவும், அவற்றின் உற்பத்தியை பெருக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என முதல்வர் விஜயை வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படிங்க: இருளில் மூழ்கிய குமரி திருவள்ளுவர் சிலை..! தவெக அரசின் சாதனை..? வலுக்கும் கண்டனம்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share