தலை விரித்தாடும் போதை புழக்கம்... பறிபோன பிஞ்சு உயிர்..! நயினார் கடும் கண்டனம்..!
தலை விரித்தாலும் போதை பொருள் புழக்கத்தால் சிறுமியின் உயிர் பறிபோனதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தனியார் பள்ளியின் உள்ளே கார் இயக்கப்பட்டபோது நான்கு வயது சிறுமி உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போதையில் இருந்த நபர் காரை இயக்கியதாக கூறப்படுகிறது. சிறுமியின் உயிரிழப்பு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே போதைப் பொருள் புழக்கத்தால் பல்வேறு குற்றச்சம்பழங்கள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த சம்பவம் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால் 4 வயது சிறுமி பலியானதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தனியார் பள்ளியின் உள்ளே, போதையில் இருந்த நபர் இயக்கிய கார் மோதி 4 வயது மாணவி பலியானதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்றும் கூறினார். திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால் தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால், பள்ளியில் இருந்த சிறுமியின் உயிரைப் பறிக்கும் அளவிற்கு கொடூரம் நிகழ்ந்துள்ளது என்று தெரிவித்தார்.
இதற்கு மத்தியில், பள்ளிக்கல்வித்துறையினர், வருவாய்த்துறையினர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் என ஒருவர் கூட சம்பவ இடத்திற்கு வராத கொடூரமும் அரங்கேறியுள்ளது என்றும் சாடினார். சட்டமன்றத் தேர்தல் தோல்வி பயத்தில், தனது அடிப்படை கடமையைக் கூட திமுக அரசு மறந்துவிட்டதா? அரசு இயந்திரம் ஒட்டுமொத்தமாக செயலிழந்து விட்டதா என்று சரமாரி கேள்விகளை முன் வைத்தார்.
இதையும் படிங்க: பாபநாசம், மணப்பாறை தொகுதிகள் வேண்டும்..! விருப்பத் தொகுதிகள் குறித்து மமக ஜவாஹிருல்லா ஆலோசனை..!!
மொத்தத்தில், பச்சிளம் குழந்தையின் மரணத்திற்கு நீதியை பெற்று தராமல் வேடிக்கைப் பார்க்கும் திமுக அரசு மீண்டுமொரு முறை ஆட்சி அமைப்பதற்கு ஆசைப்படுவதற்கான தகுதியையும் இழந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விறுவிறு தேர்தல்... 175 தொகுதிகளில் திமுக கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் போட்டி..!!