×
 

ஸ்டாலின் நல்லாட்சி தரல..! பாளையங்கோட்டையில் வாக்கு செலுத்திய நயினார் பகிரங்க குற்றச்சாட்டு..!!

ஸ்டாலின் நல்லாட்சி கொடுக்கவில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாட்சி கொடுக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவரும் சாத்தூர் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இன்று தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முழு மாநிலத்திலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் சுமார் 5.67 கோடி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர். காலை முதலே பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, உற்சாகத்துடன் வாக்களித்து வருவது கண்கூடாகத் தெரிகிறது.

தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகளின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களின் சீரான ஒருங்கிணைப்பில் வாக்குப்பதிவு தடையின்றி நடைபெற்று வருகிறது. தமிழக பாஜக தலைவரும் சாத்தூர் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் இன்று வாக்கு செலுத்தி உள்ளார். பாளையங்கோட்டையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

இதையும் படிங்க: விருதுநகர் கோர சம்பவம்: மருத்துவமனையில் தொழிலாளர்கள்.. ஓடோடி சென்று நலம் விசாரித்த நயினார் நாகேந்திரன்..!!

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் யார் முதல்வராக வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஏற்கனவே, ஆட்சி செய்த ஸ்டாலின் நல்லாட்சி கொடுக்கவில்லை என்ற குற்றம் சாட்டி உள்ளார். கஞ்சா புழக்கம், குடும்ப ஆட்சி போன்றவை நடந்ததாக சுட்டிக்காட்டி உள்ள நயினார் நாகேந்திரன், சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

இதையும் படிங்க: ஜோசப் விஜயா? ஜோசப் கிருஷ்ணாவா? செய்தியாளர்கள் சந்திப்பில் நயினார் சரமாரி கேள்வி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share