×
 

கருத்து சுதந்திரம் பறிப்பு..! முதல்வரின் துருப்பிடித்த இரும்புக்கரம்..! சாடிய நயினார்..!

கருத்து சுதந்திரத்தை பறித்து பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டு இருப்பதாக நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குற்றங்களைக் கட்டுப்படுத்தாமல் முதல்வரின் துருப்பிடித்த இரும்புக்கரம் கருத்துச் சுதந்திரத்தை மட்டும் பறிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கௌரவ் குமார் என்ற இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தையே கொலை செய்த கொடூர நிகழ்வு நடந்துள்ளது. அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோரையும் கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் பரவி வருகிறது. இந்த நிலையில், வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தையே கொலை செய்த கொடூரச் சம்பவம் குறித்து சமூகப் பொறுப்போடு எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழக பாஜகவின் சமூக ஊடகப்பிரிவு நிர்வாகி பிரவீன் ராஜ் கைது செய்யப்பட்டு இருப்பதாக நயினாார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திமுகவின் ஏவல்துறை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனக் கூறினார். அவர் கைது செய்யப்பட்ட தகவலறிந்து தொலைபேசி வாயிலாக பிரவீன் ராஜ் குடும்பத்தாருக்கு ஆறுதலைத் தெரிவித்துள்ளதோடு, சட்டரீதியாக பிரவீன் ராஜுடன் தமிழக பாஜக துணை நிற்கும் என்றும் உறுதியளித்திருப்பதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கழிவு அள்ளுற உள்ளங்களுக்கு கொடுக்கிற நன்றி கடனா இது? தரமற்ற உணவு..! நயினார் கொந்தளிப்பு..!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு, எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று தினந்தோறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் வேளையில், அதனைக் கண்டுகொள்ளாது, சமூக வலைதளத்தில் பதிவிடுவோரை மட்டும் தேடித்தேடி கைது செய்யும் முதல்வரின் துருப்பிடித்த இரும்புக்கர ஆட்சி கூடிய சீக்கிரம் தூக்கியெறியப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: தனித்து விடப்பட்ட OPS..! அவர் இல்லாமலேயே NDA பலமாக தான் இருக்கு... நயினார் பேட்டி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share