×
 

மூதாட்டிக்கும் பாதுகாப்பில்ல.. மனசு பதைபதைக்குது... நயினார் ஆதங்கம்..!!

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய மும்முரமாக செயல்பட வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானியில் வீட்டில் தனியாக வசித்து வந்த 74 வயது மூதாட்டி ஒருவர், இரு போதை இளைஞர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களிடம் குற்றவாளிகள் பிடிபட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். சம்பவம் நடந்தது பவானி பகுதியில். வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் இல்லத்திற்குள் போதையில் இருந்த இரு இளைஞர்கள் நுழைந்தனர். அவர்கள் மூதாட்டியை தாக்கிய பின்னர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்த பொதுமக்கள் ஓடிவந்தனர். அவர்கள் குற்றவாளிகளைப் பிடித்து தர்ம அடி கொடுத்து, பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மூதாட்டிக்குக்கூட பாதுகாப்பில்லாத ஆட்சி தான் மாற்றமா என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். ஈரோடு மாவட்டம் பவானியில் 74 வயது மூதாட்டியை தாக்கி 2 போதை இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளிவந்துள்ள செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்கிறது என்றார்.

முந்தைய திமுக ஆட்சியின் பலனாக தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் சாராயமும் போதைப்பொருட்களும் வேர்விட்டுப் பரவிய நிலையில், தற்போதைய ஜோசப் விஜய் அரசின் மெத்தனத்தால் பச்சிளம் குழந்தை முதல் பல் விழுந்த மூதாட்டி வரை அனைவரின் பாதுகாப்பும் சூறையாடப்பட்டு வருகிறது என்று குற்றம்சாட்டி உள்ளார். 

இதையும் படிங்க: "நான் முதல்வன்"..! சாதனையை அழிக்க முடியாது..! ஸ்டாலின் திட்டவட்டம்..!!

பிரச்சாரத்தின் போது "தூய சக்தி" என்று முழங்கிவிட்டு, ஆட்சி அமைத்ததும் மௌனவிரதமிருந்து மகளிர் பாதுகாப்பைப் பறிப்பது தான் "மாற்றமா" என்று முதல்வர் விஜய்க்கு கேள்வி எழுப்பினார். “மனம் குமுறுகிறது, கண் கலங்குகிறது" என இனியும் வசனம் பேசாமல், தமிழகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மும்முரமாகச் செயல்படுங்கள் என்று தெரிவித்தார். 

இதையும் படிங்க: நான் அன்று சொன்னது இன்று நனவாகியிருக்கிறது..!! தவெகவில் இணைந்த மன்சூர் அலிகான் உருக்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share