×
 

அதளபாதாளத்தில் "Law & Order"... ஒரே அராஜகம்..!! தவெக ஆட்சியை வெளுத்த நயினார்..!

தவெக அரசை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

ஆளும் அரசின் மெத்தனமும், தவெக-வினரின் அராஜகமும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளது. ஆளும் அரசின் நிர்வாகச் சீர்கேட்டாலும், காவல்துறையின் மெத்தனத்தாலும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு இன்று அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது என்றார்.

அதற்கு உதாரணமாக தூத்துக்குடி அருகே வேன் ஓட்டுநர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் போராடும் அவலம் நடந்தேறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். கட்சியினரின் அராஜகம் ஒருபுறம் என்றால், மறுபுறம், பிஞ்சுக் குழந்தைகளுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் தமிழகத்தில் தொடர்கதையாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் 10 வயது சிறுமிக்குப் பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் தொல்லை அளித்த கொடூரம் நெஞ்சைப் பதற வைக்கும் நிலையில், தற்போது சேலம் எடப்பாடி அருகே 16 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த மின்வாரிய ஊழியர் சீரங்கன் என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறினார். அரசு ஊழியரே இதுபோன்ற கீழ்த்தரமான குற்றத்தில் ஈடுபட்டிருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது என்றும் காட்டமாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: "ரவுடிகளுக்கு பதவி"...! இன்னும் எத்தனை காவு கொடுக்கணும்..? முதல்வர் விஜயை சாடிய நயினார்..!

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் துளியும் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது என்றும் தூத்துக்குடி கொலை வழக்கில் தொடர்புடைய தவெக நிர்வாகிகள் மீதும், கோவை மற்றும் சேலத்தில் சிறுமிகளின் வாழ்க்கையைச் சீரழித்த கயவர்கள் மீதும் காவல்துறை எவ்வித அரசியல் தலையீடுமின்றி இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், குற்றவாளிகளுக்கு சட்டத்தின் உச்சபட்ச தண்டனையை விரைவாகப் பெற்றுத் தர ஆளும் அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: சி.ஜோசப் விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கு?... விடிந்ததுமே கொதித்தெழுந்த நயினார் நாகேந்திரன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share