"ரவுடிகளுக்கு பதவி"...! இன்னும் எத்தனை காவு கொடுக்கணும்..? முதல்வர் விஜயை சாடிய நயினார்..!
சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி முதல்வர் விஜய்யை நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் அருகே நேற்று நள்ளிரவு ஒரு சிறுவன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். நயினார் நாகேந்திரன் தனது விமர்சனத்தில், “ஒவ்வொரு நாள் காலையிலும் இன்று எங்கே கொலை நடந்துள்ளது.
எந்தப் பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என்ற அச்சத்திலேயே பொழுது விடிவது தான் தவெகவின் மாற்று அரசியலா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்கள் நிர்வாகத்தின் அடிப்படையைக் கற்றுக்கொள்ள இன்னும் எத்தனை உயிர்களைக் காவு கொடுக்க வேண்டும் என்றும் வினவியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக ஆட்சியில் சீர்குலைந்து கிடந்த சட்டம் ஒழுங்கை கடுமையாக விமர்சித்த விஜய், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதை முதலில் சரி செய்திருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். “அதை விட்டுவிட்டு ஊரில் உள்ள குற்றவாளிகளை எல்லாம் தேடித்தேடி அமைச்சராக்குவதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால் மக்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்ய முடியும்?” என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: குற்றங்களுக்கு கடிவாளம்... சட்டம் ஒழுங்கு அலர்ட்... அதிரடி ஆக்ஷனில் முதல்வர் விஜய்..!
கோவை சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி நயினார் நாகேந்திரன் முன்பே இதேபோன்ற விமர்சனங்களை முன்வைத்திருந்தார். “தமிழகத்தில் உள்ள குழந்தைகளுக்கெல்லாம் நான் தான் தாய் மாமன்” என்று சொல்லிக் கொள்ளும் முதல்வர் ஜோசப் விஜய், ஆட்சிக்கு வந்தவுடன் ரவுடிகளையும் குற்றவாளிகளையும் அமைச்சராக்குவதில் காட்டிய வேகத்தை பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் காட்டாததன் விளைவுதான் இத்தகைய கொடூர சம்பவங்கள் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: சி.எம்.சார்... தமிழ்நாடு முழுக்க போராட்டம் வெடிக்கும்... கோவை சிறுமி விவகாரத்தில் கொந்தளித்த பெண்...!