55 நாட்களில் 100-க்கும் மேற்பட்ட குற்றங்கள்... தவெக அரசு குறித்து ஆளுநரிடம் புகார்... நயினார் பரபரப்பு பேட்டி..!!
தமிழக பாஜக நிர்வாகிகள் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து பேசினர்.
தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை தமிழக பாஜக நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்புக்குப் பிறகு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஆளுநரிடம் என்ன பேசினோம் என்பது குறித்து எடுத்துரைத்தார். அரசுப் பொறுப்பில் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி உள்ளிட்டவர்கள் நியமிக்கப்பட்டதை ஆளுநரிடம் சுட்டிக்காட்டியதாக தெரிவித்தார்.
தமிழக வெற்றி கழகம் ஆட்சி பொறுப்பேற்ற 55 நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வன்கொடுமைகளும், கொலைகளும் நடந்து இருப்பதாக தெரிவித்தார். திமுக ஆட்சிக்கும் தமிழக வெற்றிக்கழக ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்ற கருத்து தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.
தமிழக வெற்றி கழக அரசை கலையுங்கள் என்று ஆளுநரிடம் கூறவில்லை என்று விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன், அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக கூறினோம் என்றார். பெண் குழந்தைகளிடம் காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் நடந்து கொண்ட விதம் தவறு என ஆளுநரிடம் எடுத்துக் கூறியதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஆய்வு நடத்த அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்துள்ள அவர் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என கூறுவது தவறு என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தவெகவுக்கு விழுந்த ‘திடீர்’ இடி... ஆளுநரைத் தேடி சென்ற பாஜக முக்கிய நிர்வாகிகள்.. பின்னணி என்ன?
சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கு சட்டம் தெரியுமா..? தெரியாதா..? என்றும் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழக அரசு தயாரித்து கொடுத்த உரையை சட்டப்பேரவையில் ஆளுநர் அப்படியே வாசித்துள்ளார் என்று சுட்டிக்காட்டினார். ஆளுநர் ஆட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் போது அவரை கொச்சைப்படுத்தி பேசுவது அமைச்சருக்கு அழகல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "அவல ஆட்சி"..! காவல்துறைக்கே பாதுகாப்பில்ல... தவெகவை பந்தாடிய நயினார்..!