×
 
☰

பள்ளியில் ஒடுக்குமுறை..! தவெக ஆட்சியில் தொடரும் அவலம்..!! நயினார் காட்டம்..!!

பள்ளியில் ஒடுக்குமுறை தொடர்வதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பள்ளி மாணவர்கள் மீதான மத அடையாள ஒடுக்குமுறை தொடர்பாக கடுமையாக விமர்சித்துள்ளார். ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியில் இத்தகைய அவலங்கள் தொடர்வதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் தசரா விரதமிருந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்களின் மாலையைக் கழற்றச் சொல்லி தலைமை ஆசிரியர் தாக்கிய சம்பவமும், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 10ஆம் வகுப்பு மாணவியின் கைக் காப்பினை மறைக்கச் சொன்ன தலைமை ஆசிரியையின் நடவடிக்கையும் அடுத்தடுத்து நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாகேந்திரன் தெரிவித்தார்.

மாணவப் பருவத்திலேயே பிஞ்சு நெஞ்சங்களில் வன்மத்தை விதைத்து, அவர்களின் பண்பாட்டு அடையாளங்களையும் வழிபாட்டு உரிமையையும் நசுக்கும் இத்தகைய மனித உரிமை மீறல்கள் கல்விக்கூடங்களில் தலைவிரித்தாடுவது மன்னிக்க முடியாத குற்றம் என அவர் வலியுறுத்தினார்.முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சி அமைந்தது முதலே இத்தகைய மத அடக்குமுறைச் சம்பவங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக நாகேந்திரன் சுட்டிக்காட்டினார்.

இந்த அரசின் அமைச்சர்களே நடுநிலையின்றி ஒரு குறிப்பிட்ட மத உணர்வோடு பாரபட்சமாகச் செயல்படுவதை முன்னுதாரணமாகக் கொண்டே பள்ளி நிர்வாகங்களும் இத்தகைய அத்துமீறல்களில் ஈடுபடுகின்றன என அவர் குற்றம் சாட்டினார்.கல்வி நிலையங்கள் என்பவை சமத்துவத்தையும் மத நல்லிணக்கத்தையும் போதிக்கும் ஆலயங்களாக இருக்க வேண்டுமே தவிர, குறிப்பிட்ட ஒரு மதத்தின் அடையாளங்களைப் பறிக்கும் கூடங்களாக மாற அரசு ஒருபோதும் துணைபோகக் கூடாது என நாகேந்திரன் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: சி.எம். விஜய்க்கு புடவை போர்த்திய நயினார் நாகேந்திரன் ... அமைச்சர் ஷாஜகான் சொன்ன அதிரடி விளக்கம்...!

ஆத்தூர் மற்றும் தக்கலை பள்ளிச் சம்பவங்களில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர்கள் மீது உடனடியாகக் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனியாவது அரசும் அதன் அமைச்சர்களும் ஒருதலைப்பட்ச மதச் சார்போடு செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

 

இதையும் படிங்க: அரசு விழாவில் நயினார் நாகேந்திரன் எப்படி உட்காரலாம்? காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share