×
 

ஆயிரம் தடை வந்தாலும்... தீபத்தூண் ஒளிரும்..! நயினார் நாகேந்திரன் உறுதி..!!

ஆயிரம் தடைகள் வந்தாலும் திருப்பரங்குன்றம் தீபத்தூண் ஒளிரும் என நயனார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். முருகனின் முதலாம் படைவீடான திருப்பரங்குன்றத்தில் கோவிலுக்கு சொந்தமான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உறுதியாகக் கூறியுள்ளது.

இந்த தீர்ப்பு தனக்கு அளவில்லா மகிழ்ச்சியையும் பூரண மனநிறைவையும் தருவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். ஆயிரம் தடைகள் வந்தாலும் திருப்பரங்குன்றத்தின் தீபத்தூண் ஒளிரும் என்று உறுதியாகக் கூறிய அவர், முருக பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளை பறிப்பதற்காக யார் எத்தனை வழக்குகளைத் தொடுத்தாலும், எத்தனை பராக்கிரமசாலிகளை வாதிட அழைத்து வந்தாலும் இறுதியில் இறை நம்பிக்கையும் இயற்கையின் நியதியுமே வெல்லும் என்பதற்கான உதாரணமாக இந்த தீர்ப்பைப் பார்க்க வேண்டும் என்றார்.

தங்களின் வாக்கு வங்கிக்காக மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்துக்களின் நம்பிக்கைகளை எள்ளி நகையாடியவர்களின் மூளை குழம்பிப் போகுமளவுக்கு குட்டு வைத்து அனுப்பியுள்ள மாண்பமை உச்சநீதிமன்றத்திற்கு தனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். “ஒடியா விழவின் நெடியோன் குன்றம்” என நமது சங்ககாலப் பாடலான அகநானூறு பெருமையுடன் பாடும் திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள தீபத்தூண் கார்த்திகை தீபத்தால் ஒளிரும் அந்த கண்கொள்ளா காட்சியை தரிசிக்க ஆவலுடன் காத்திருப்பதாக நயினார் நாகேந்திரன் கூறினார்.

இதையும் படிங்க: 10 நாட்களில் 6 கொலைகள்... REELS MODEL அரசு..! விளாசிய நயினார் நாகேந்திரன்..!!

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா என்று முழங்கிய அவர், இந்த வெற்றி முருக பக்தர்கள் அனைவருக்கும் சொந்தமானது என்றும் வலியுறுத்தினார்.திருப்பரங்குன்றம் என்பது முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவதாகக் கருதப்படுகிறது. இந்தத் தலத்தில் உள்ள தீபத்தூண் கோயிலுக்குச் சொந்தமானது என்பதையும், அதில் கார்த்திகை தீபம் ஏற்றுவது பக்தர்களின் நீண்டகால நம்பிக்கை மற்றும் வழிபாட்டு உரிமை என்பதையும் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: ஆவின் பாலில் மருந்து வாடை..! மக்கள் உடல் நலனோடு விளையாடுவதா..? நயினார் ஆவேசம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share