×
 

ஆசிரியர் திட்டியதால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி.! தற்கொலை தீர்வாகாது... நயினார் வேதனை.!

மதுரையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தை சுட்டிக்காட்டி நயினார் நாகேந்திரன் வேதனை தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மாணவர்களை நோக்கி ஒரு உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார். தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மதுரையில் மாணவி ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தை சுட்டிக்காட்டி வேதனை தெரிவித்துள்ளார்.

மதுரை அலங்காநல்லூர் அருகேயுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் 11 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும், விருதுநகர் காரியாபட்டி அரசுப் பள்ளியில் சக மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் அடித்து கேலி செய்ததால் ஆறாம் வகுப்பு மாணவன் தனது உயிரை மாய்த்துக்கொண்டதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் தனது மன அமைதியையே குலைத்துவிட்டன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வியின் துணையுடன் காலத்தை வெல்ல வேண்டிய குழந்தைச் செல்வங்கள் மரணத்தின் வாசற்படியை இப்படி அவசரமாக அடைய நினைப்பதும், அதற்கு ஏதோவொரு வகையில் சமூகம் காரணமாக அமைவதும் நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இறகை விடவும் மிக மென்மையான மனநிலை கொண்ட மழலைச் செல்வங்களின் உளவியல் சிந்தனைகளை வலுப்படுத்துவதில் கல்விக்கூடங்களும் ஆசிரியப் பெருமக்களும் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றனர் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: ஸ்ரீசைலத்தில் பயங்கரம்... விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தூக்கிட்டு தற்கொலை... பகீர் பின்னணி...!

எனவே மாணவர்களை அன்பு எனும் குடையின் கீழ் ஆசிரியர்கள் அரவணைத்து வழிநடத்த வேண்டும் என்றும், குழந்தைச் செல்வங்களை மிகக் கவனமாகக் கையாள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.அதே சமயம், ஒரு அரசியல் கட்சியின் தலைவராக அல்லாமல் அன்புள்ள அப்பாவாகவும் அக்கறை கொண்ட ஒரு தோழனாகவும் அனைத்து மாணவக் கண்மணிகளிடமும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வாழ்க்கையில் எத்தனை ஆயிரம் சோதனைகள் வந்தாலும் குடும்பத்தாரிடமோ நெருங்கியவர்களிடமோ பகிர்ந்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சியுங்கள் என்றும், தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்

 

இதையும் படிங்க: தனியார் கல்லூரி விடுதியில் பயங்கரம்... பூட்டிய அறையிலிருந்து வந்த துர்நாற்றம்... உள்ளே மாணவி கிடந்த பகீர் நிலை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share