தனியார் கல்லூரி விடுதியில் பயங்கரம்... பூட்டிய அறையிலிருந்து வந்த துர்நாற்றம்... உள்ளே மாணவி கிடந்த பகீர் நிலை...!
காஞ்சிபுரம் அருகே கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் அமைந்துள்ள சங்கரா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த மாணவி, கல்லூரியின் விடுதியில் பூட்டிய அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில், மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவர்கள் நள்ளிரவு வேளையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் அமைந்துள்ள சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர் விடுதியில் தங்கி பயின்று வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் கல்லூரியை முடித்துவிட்டு, வளாகத்தில் அமைந்துள்ள விடுதிக்குச் சென்றதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக நிகிதா கல்லூரிக்கும் செல்லாமல், வெளியிலும் வராமல் இருந்து வந்திருக்கிறார்.
இதையும் படிங்க: கேரள மாணவி தற்கொலையில் அதிரடி ட்விஸ்ட்.... தலைமறைவாக இருந்த முக்கிய நபரை தட்டித்தூக்கிய போலீஸ்...!
இந்நிலையில், கல்லூரி விடுதி நிர்வாகம் தரப்பில் வருகைப் பதிவேடு எதுவும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று அந்த மாணவியின் அறையிலிருந்து துர்நாற்றம் வந்துள்ளது. அந்த துர்நாற்றத்தின் காரணமாக, பூட்டிய நிலையில் இருந்த கதவை உடைத்து விடுதி நிர்வாகத்தினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது மாணவியின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு, அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டது.
மாணவியின் உடலை எடுத்துச் செல்லும்போது மாணவர்கள் அங்கு வந்து, அந்த வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து போலீசார் வரவழைக்கப்பட்டு, மாணவியின் உடல் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு போலீசார் லேசான தடியடி நடத்தியதாகவும், போலீசார் அங்கிருந்து மாணவியின் உடலை எடுத்துச் சென்றதாகவும் மாணவர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காஞ்சிபுரம் இரட்டைக் கொலையில் அதிரடி திருப்பம்... மேலும் 4 பேரை தட்டித்தூக்கிய காவல்துறை...!