×
 

அரசின் அலட்சியமே ஒரு உயிர் போக காரணம்.. திமுகவை பந்தாடிய நயினார் நாகேந்திரன்..!

மின் கசிவை சரி செய்வதில் அரசு காட்டிய அலட்சியத்தால் தான் அப்பாவி சிறுவன் உயிரிழந்தான் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவொற்றியூர் தாங்கல் பயில்வான் தெருவைச் சேர்ந்த நவுபல் என்ற 17 வயது மாணவன் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்றிரவு 8 மணி அளவில் டியூசன் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, மழை பெய்ந்து தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த நவுபல் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில், மயக்கமடைந்த சிறுவனை மீட்பதற்காக மின்சாரத்தை துண்டிக்கும் படி சம்பந்தப்பட்ட மின் பகிர்மான அலுவலகத்திற்குள் அங்குள்ள பொதுமக்கள் போன் செய்தனர். ஆனால் அங்கு யாரும் நீண்ட நேரமாக போனை எடுக்காததால், பொதுமக்களே தங்களது உயிரை பணயம் வைத்து, சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

இதையும் படிங்க: வேடிக்கை பாக்குறது மட்டும்தான் வேலையா? முதல்வர் ஸ்டாலினை விளாசிய நாயினார்..? அடுக்கும் கேள்விகள்..!

அங்கு சிறுவனின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்றிரவே திருவொற்றியூர் நெடுஞ்சாலை மற்றும் எண்ணூர் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் சமாதானம் ஆன மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

தொடர்ந்து இன்று காலையும் சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை உதவி செயற் பொறியாளரைக் கைது செய்யவும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருவொற்றியூர் சாலையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவன் உயிரிழந்த சம்பவத்தை கேட்டு தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், உயிரிழந்த அம்மாணவனின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். 

மேலும் அப்பகுதியில் மின் கசிவை சரி செய்வதில் ஆளும் திமுக அரசு காட்டிய அலட்சியத்தின் விளைவாகவே ஒரு அப்பாவி சிறுவன் பலியாகியுள்ளான். ஒருநாள் மழைக்கே நீர் தேங்குமளவிற்கான உட்கட்டமைப்பு வசதிகளையும், பல நாள் புகாரளித்தும் ஒரு சிறு மின்கசிவைக் கூட சீர்படுத்த முடியாத நிர்வாகத்தையும் வைத்துக் கொண்டு “நாடு போற்றும் நல்லாட்சி” என திமுக-வினர் விளம்பரப்படுத்திக் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை என்று கடுமையாக சாடியுள்ளார். 

எனவே, மாணவனின் மரணத்திற்கு ஆளும் அரசு முழுப் பொறுப்பேற்றுக் கொண்டு, அம்மாணவனின் குடும்பத்தாருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீட்டு தொகையாக அறிவிப்பதுடன், சென்னை மாநகரில் முறையான மழைநீர் வடிகால் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். 

 

இதையும் படிங்க: மா விவசாயிகளோட வயித்துல அடிக்காதீங்க முதல்வரே.. ஆளும் அரசை தோலுரித்த நயினார் நாகேந்திரன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share