×
 

கோபாலபுர பகட்டு செலவுக்கு பணம் இருக்கு., புத்தகத்துக்கு இல்லையா? கொதித்துப் போன நயினார்..!

வெற்று விளம்பரங்களுக்கு பல கோடி செலவு செய்யும் திமுக அரசால் வெளிமாநில தமிழ் சங்கங்களுக்கு இலவசமாக பாடநூல் வழங்க முடியாதா என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

வெளிநாட்டு தமிழ்ச் சங்கங்கள், தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தைப் பரப்புவதற்காக உலகெங்கும் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்கள், குறிப்பாக வெளிநாடுகளில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில், தமிழ்நாடு அரசின் பாடநூல்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு தமிழ் கற்பிக்கின்றன.

முன்பு, இந்தப் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை இலவசமாக வழங்கி வந்தது, இதனால் வெளிநாட்டு தமிழ் மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்கவும், தமிழகத்தின் கலாசாரத்துடன் இணைந்திருக்கவும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில், நிதி நெருக்கடியின் காரணமாக, வெளிநாட்டு தமிழ்ச் சங்கங்களுக்கு இலவச பாடநூல்கள் வழங்குவதற்கு தமிழக அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியவில்லை என்று கருதப்படுகிறது.

இதையும் படிங்க: DMK ஜெயிக்கும்போது ஓட்டு மெஷின் சரியா இருந்துச்சா? தமிழிசை சரமாரி கேள்வி..!

இதனை சுட்டிக்காட்டி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். வெளிமாநில தமிழ்ச்சங்கங்களுக்கு சுமார் நாற்பது ஆண்டுகளாக தமிழ்ப் பாடநூல்களை இலவசமாக விநியோகித்து வந்த திட்டத்தை நிதி நெருக்கடி எனக் காரணம் காட்டி திமுக அரசு நிறுத்திவைத்திருப்பது கண்டனத்திற்குரியது என்று கூறினார்.

அயல் மாநிலங்களில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் ஏற்கனவே நிதிப்பற்றாக்குறையால் அவதியுற்று வரும் வேளையில், அவர்களின் மீது மேலும் நிதிச்சுமையை ஏற்றுவது நியாயமா என்று கேள்வி எழுப்பினார்.

இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அயல் மாநிலங்களில் தமிழ் படிக்கும் ஏழை எளிய தமிழ் வம்சாவளி மாணவர்கள் தான் என்பது தெரியாதா எனவும் இதுதான் தமிழ் வளர்ச்சியில் திராவிட மாடல் கொண்டுள்ள அக்கறையா எனவும் கேட்டார்.

கோபாலபுரம் தலைமுறையினரின் பகட்டு செலவுகளான பேனா சிலை, கார் ரேஸ். பிரச்சார நடனம், விளம்பரங்கள் ஆகியவற்றிற்கு நிதியை அள்ளித் தெளிக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்களுக்கு வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழ் தலைமுறையினரின் வறுமையும், தமிழ் வளர்ச்சியும் புலப்படாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

அன்னைத் தமிழின் வளர்ச்சியில் அரசியலைத் தாண்டி உண்மையாகவே திமுக அரசுக்கு அக்கறை இருந்தால் உடனடியாக இம்முடிவைக் கைவிட்டு வெளிமாநில தமிழ்ச்சங்கங்களுக்கு பாடநூல்களை வழக்கம் போல இலவசமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: ஓட்டு திருடிதான் நீங்க ஜெய்ச்சீங்களா ராகுல்? பூந்து விளாசிய அண்ணாமலை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share