×
 

பாட்டிலுக்கு பத்து ரூபா... அப்பதான் விஜய் மேல செருப்பு வீசுனாங்க... நயினார் ஓபன் டாக்..!

சட்டப்பேரவை நிகழ்வு தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் கரூர் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி கேட்ட பிறகுதான் முதல் அமைச்சர் பேசியிருக்க வேண்டும் என்றும் முதலில் முதலமைச்சருக்கு வாய்ப்பு கொடுத்தது ஏன் எனவும் சபாநாயகருக்கு கேள்வி முன்வைத்தார். தொடர்ந்து கரூர் சம்பவத்தில் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து திமுக அரசை குற்றம் சாட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சிவசங்கர் உள்ளிட்டோர் விளக்கம் அளித்தனர். கரூர் சம்பளம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்ற நிலையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். 

இந்த நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கரூர் பிரச்சாரத்தின்போது பாட்டிலுக்கு 10 ரூபாய் என விஜய் பாடியபோதுதான் காலணி வீச்சு நடந்தது என தெரிவித்தார். காலணி வீச்சு மட்டுமல்ல பாட்டில், தேங்காய் கூட வீசப்பட்டதாக கூறினார். அது மட்டுமல்லாமல் ஜெனரேட்டர் ஆப் செய்யப்பட்டது என்றும் லத்தி சார்ஜ் நடந்தது எனவும் தெரிவித்தார். ஆனால் முதலமைச்சர் பேசும்போது அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று பேசுகிறார் என்றும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: தட்டி விடு... கடைசி நிமிஷத்துல கூட எல்லாம் மாறும்! நயினார் நம்பிக்கை..!

காவலர்களும் டிஎஸ்பியும் அங்கு இல்லை என்றும் கேட்கும் இடத்திற்கு எதிர்க்கட்சிகளுக்கு காவல்துறை அனுமதி தருவதில்லை எனவும் கூறினார். நீதிமன்றம் சென்று தான் அனுமதி பெறும் சூழல் இருக்கிறது என்று பேசிய நயினார் நாகேந்திரன், கரூர் ரவுண்டானா பகுதியை கேட்டதற்கு அனுமதி கொடுக்காமல், வேலுச்சாமிபுரத்தை கொடுத்து இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். கரூர் சம்பவத்திற்கு தமிழக அரசு காரணம் என்பது வருத்தம் அளிப்பதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி... எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி... உண்மையை மறைக்க பாக்குறாங்க! இபிஎஸ் பரபரப்பு பிரஸ்மீட்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share