Election முடிஞ்சதும் தெரியும் யார் ICU-ல இருக்காங்க-னு ! உதயநிதிக்கு நயினார் பதிலடி
அதிமுக ஐசியுவில் அனுமதிக்கப்படும் என்ற உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்தார்.
தமிழக அரசியலில் இன்று பேசுப் பொருளாக மாறியுள்ள விஷயம் என்றால் ஆம்புலன்ஸ் என்றே சொல்லலாம். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செல்லும் பிரச்சாரத்தின் போதெல்லாம் ஆம்புலன்ஸ் அனுப்பப்படுவதாகவும், வேண்டுமென்றே செய்வதாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது. இந்த பிரச்சனை ஒருபக்கம் இருக்க அதிமுக ICU- வில் அனுமதிக்கப்படும் என என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இபிஎஸ் ஆம்புலன்ஸில் செல்வார் என்று தான் கூறவில்லை என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார். அதிமுக ஆம்புலன்சில் செல்லும் நிலையில் உள்ளதாகவே தான் பேசியதாகவும் மிகவும் வன்மத்தோடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசி இருப்பதாகவும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
எந்த கட்சித் தலைவர் கூட்டம் போட்டாலும் அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் செல்லும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆம்புலன்சில் செல்வார் என தான் கூறவில்லை எனவும் மனிதாபிமானம் உடைய மனிதன் யாராவது அப்படி பேசுவாரா என்றும் கேள்வி எழுப்பினார். இந்த நிலையில், விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, யார் ICU வில் இருப்பார்கள் என்று தெரியும் என தெரிவித்தார். மேலும் செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்ததால் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படாது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: உதயநிதி சார்! சட்டம் ஒழுங்கே ICU-ல தான் இருக்கு… அதிமுக செம கலாய்..!
தற்போதைய சூழலில் நான் பதவி விலக வேண்டிய அவசியமில்லை என்றும் அ.தி.மு.க.வை உடைக்க வேண்டிய அவசியம் பா.ஜ.க.விற்கு கிடையாது எனவும் அ.தி.மு.க.வில் தற்போதைய சூழலில் எந்த பிளவும் இல்லை என்றும் கூறினார். மேலும், திமுக பலமாக இருப்பதாக அண்ணாமலை எங்கும் கூறவில்லை என்றும், திரித்து கூறப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழக அரசின் Dr. ராதாகிருஷ்ணன் விருது... நல்லாசிரியர்களுக்கு வழங்கி கவுரவிக்கும் துணை முதல்வர்!