தற்கொலைகளின் தலைநகரம் தமிழ்நாடு... என்னதான் நடக்குது? விளாசிய நயினார்...!
தற்கொலைகளின் தலைநகரமாக தமிழ்நாடு மாறி இருக்கிறது என நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் என்பது உலகெங்கிலும் நிலவும் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினை. இது பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு, மற்றும் மனித மாண்பை மீறும் ஒரு கடுமையான குற்றம். இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும், பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. போதை பொருட்கள் தொடக்கம் அதிகரிப்பதன் காரணமாக பல்வேறு குற்ற சம்பவங்கள் நிகழ்வாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை சம்பவங்கள் என நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. இது போன்ற சம்பவங்கள் ஆட்சியில் உள்ள திமுக அரசை கேள்விக்குறியாக்கியுள்ளது.
திமுக ஆட்சியில் தான் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து இருப்பதாக எதிர் கட்சிகள் கூறி வருகின்றனர். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை மெத்தனமாக செயல்படுகிறது என்றும் காவல்துறையல்ல ஏவல் துறை என்றும் எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறி விட்டதாகவும் கூறி வருகின்றனர்.
குறிப்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக அரசின் மீது பல்வேறு விமர்சனங்களில் முன்வைத்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு உள்ளது என்று குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: கேடுகெட்ட ஆட்சி... காட்டாட்சி..! கடிவாளம் போடுவோம் முதல்வரே... நயினார் உறுதி...!
தற்கொலைகளின் தலைநகரமாக தமிழ்நாடு விளங்குகிறது என்று தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் மலக்குழி மரணங்கள் அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டார். தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டிய நயினார் நாகேந்திரன், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 13 சதவீதம் அதிகரித்து உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: சீரழிந்த ஆட்சிக்கு நேற்று ஒரு நாளே சாட்சி… துருப்பிடித்த திமுக… நயினார் ஆவேசம்…!