×
 

சிறுவனை தூக்கி எறியும் மதபோதகர்... பதைபதைக்கும் வீடியோ..! எவ்ளோ தைரியம்?... விளாசிய நயினார் நாகேந்திரன்...!

குழந்தைகளை வதைக்கும் உரிமையை மதபோதகருக்கு அளித்தது யார் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

குழந்தைகளை வதைக்கும் உரிமையை மதபோதகருக்கு அளித்தது யார் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மதரஸா பள்ளி மாணவர்களை ஆசிரியர் ஒருவர் கொடூரமாகத் தாக்கி தூக்கி வீசும் காணொளி வெளியாகியுள்ளது. மாணவர்களோடு அமர்ந்து சிறுவன் ஒருவர் படித்துக் கொண்டுள்ளார். அப்போது அந்த மதராச பள்ளி ஆசிரியர் சிறுவனை தூக்கி வீசி உள்ளார்.

இது தொடர்பான காட்சிகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி உள்ள நயினார் நாகேந்திரன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். சிறுவனை தூக்கி வீசும் காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்றும் கூறினார். 

காணொளியைப் பார்த்த பின், படிக்க வந்த சிறுவனைத் தூக்கியெறியும் அளவிற்கு அப்படி என்ன தவறு நிகழ்ந்தது., மதபோதனைக்காக வந்த சின்னஞ்சிறு மாணவர்களை இப்படி அடித்து உதைக்கும் உரிமை யார் அளித்தது என கேள்வி எழுப்பினார். இது போல எத்தனை மதப் பள்ளிகளில் நம் பிள்ளைகள் துன்புறுத்தப்படுகின்றனர் போன்ற எண்ணிலடங்காத கேள்விகள் மனதைத் துளைக்கின்றன என்றும் கூறினார்.

இதையும் படிங்க: ஊடக சுதந்திரம்... சர்வாதிகாரமா..? கண்ணாடி சார் அது..! முதல்வரை சாடிய தமிழக பாஜக...!

மதச்சார்பின்மையின் பாதுகாவலராகவும் தமிழகப் பிள்ளைகளின் அப்பா என்றும் தம்மை எப்போதும் முன்னிலைப்படுத்திக் கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட மதரஸா பள்ளி ஆசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

இதையும் படிங்க: புலி வருது, புலி வருது..! இதே கதைதான்... முதலீடுகள் தொடர்பாக முதல்வரை விளாசிய நயினார்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share